Fukushima அணு உலை கழிவு நீரை கடலில் விட ஜப்பான் முடிவு; எதிர்க்கும் உலக நாடுகள்

புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து, கழிவு நீரை கடலில் வெளியேற்றுவதற்கு  முன்பு முழுமையாக சுத்திரகரிக்கப்படும் என்று ஜப்பான் கூறுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 13, 2021, 03:28 PM IST
  • ஜப்பானில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மற்றும் எதிர்கட்சிகளுடன் பல நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.
  • கழிவு நீரை கடலில் வெளியேற்றுவதற்கு முன்பு முழுமையாக சுத்திரகரிக்கப்படும் என்று ஜப்பான் கூறுகிறது.
  • சுத்திகரிக்கப்பட்டாலும் ஆலையில் இருந்து வெளியேறும் நீரில் கதிரியக்கத்தன்மை இருக்கும் என்று நம்பப்படுகிறது.
Fukushima அணு உலை கழிவு நீரை கடலில் விட ஜப்பான் முடிவு; எதிர்க்கும் உலக நாடுகள் title=

புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து (Fukushima nuclear plant) ஒரு மில்லியன் டன் கடலுக்குள் விடுவிக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. இதற்கு ஜப்பானில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் மற்றும் எதிர்கட்சிகளுடன்  பல நாடுகளும் கவலை தெரிவித்துள்ளன.

ஒரு மில்லியன் டன் நீர் கடலுக்குள் திறந்து விடுவதற்கு முன்பு முழுமையாக வடிகட்டப்படும் என்று ஜப்பான் கூறுகிறது, இருப்பினும், உலகின் பல நாடுகள், இதுபெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சுகின்றன.

புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து, கழிவு நீரை கடலில் வெளியேற்றுவதற்கு  முன்பு முழுமையாக சுத்திரகரிக்கப்படும் என்று ஜப்பான் கூறுகிறது. அதனால், கடலில் வாழும் உயிரினங்களுக்கு எந்தவிதமான பாதகமான விளைவையும் ஏற்படுத்தாது.

அணுசக்தி ஆலையின் நீரை கடலில் விடுவிக்கும் செயல்முறை சர்வதேச தரத்தை பின்பற்றி செயல்படுத்தப்படும் என ஜப்பான் கூறுகிறது.  ஜப்பானின் இந்த நடவடிக்கை முற்றிலும் பொறுப்பற்றது என்று சீனா (China) கடும் கண்டனம் எழுப்பியுள்ளது. ஜப்பான் இதைச் செய்தால் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. 

ALSO READ | ”வாலை” நறுக்கினால் மட்டுமே வாழலாம்; கர்ப்பம் தரிக்கவும் கடுமையான கட்டுப்பாடு

ஜப்பானின் இந்த நடவடிக்கையை தென் கொரியாவும் (South Korea) விமர்சித்ததோடு, ஜப்பானின் இந்த திட்டம் அழிவை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது. சுத்திகரிக்கப்பட்டாலும் ஆலையில் இருந்து வெளியேறும் நீரில் கதிரியக்கத்தன்மை இருக்கும் என்று நம்பப்படுகிறது. இது நீர்வாழ் உயிரினங்களுக்கு, குறிப்பாக மீனவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என இயற்கை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இந்த விஷயத்தில் அமெரிக்கா ஜப்பானிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முழுமையான வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்கும் ஜப்பான் அனைத்து வகையிலும் சர்வதேச தரங்களைப் பின்பற்றுகிறது என்று அமெரிக்கா கூறுகிறது. கழிவு நீரை சுத்திகரித்து கடலில் விடுவிக்கும் இந்த செயல்முறையைத் தொடங்க இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று ஜப்பான் அரசு கூறுகிறது.

ALSO READ | விந்தை உலகம்: சீனாவில் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News