தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ் மாணவர்கள் ஆர்பாட்டம்!

இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுத்துள்ளனர்!

Last Updated : Mar 13, 2019, 06:01 PM IST
தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழ் மாணவர்கள் ஆர்பாட்டம்! title=

இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுத்துள்ளனர்!

பிரம்மாண்ட ஆர்ப்பாட்ட பேரணி இன்று மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக பாராளுமன்றம் ஒட்டிய வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

நாடுமுழுவதிலும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஆர்பாட்டமானது ராஜகிரியவில் இருந்து பத்தரமுல்லை திசை நோக்கி பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேலையில் பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைய முற்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் வீதி அடைக்கப்பட்டது.

மேலும் பாதுகாப்பு கருத்தி அங்கு காவல்துறையினர் மற்றும் கலகம் அடக்கும் பிரிவினர் ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் இந்த பிரமாண்ட பேரணியின் சுமார் 5000-கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றது. 

இந்நிலையில் யாழ் பல்கலை மாணவர்எளின் ஆர்பாட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தில் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்ற அரசியல்வாதிகள், மக்களை மறந்து அரசாங்கத்தை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு, இப்படியான செயற்பாடுகள் மூலம் தமிழர்களுக்கு எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை எனவும் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்துக் கொண்டு தமது ஆதரவினை அளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

Trending News