Island issue: பயிற்சிகளை மேற்கொண்டு ஜப்பானுடன் மோதும் தென்கொரியா

ஜப்பானால் உரிமை கோரப்படும் ஒரு தீவைச் சுற்றி தனது வருடாந்திர பயிற்சிகளை தென் கொரிய ராணுவம் தொடங்கியுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 15, 2021, 03:56 PM IST
  • தென் கொரியாவில் டோக்டோ என்று அழைக்கப்படும் தீவு
  • ஜப்பான் கடலில் தாகேஷிமா என்றும் அழைக்கப்படுகிறது
  • இரு நாடுகளும் இந்தத் தீவுக்கு உரிமை கோருகின்றன
Island issue: பயிற்சிகளை மேற்கொண்டு ஜப்பானுடன் மோதும் தென்கொரியா title=

ஜப்பானால் உரிமை கோரப்படும் ஒரு தீவைச் சுற்றி தனது வருடாந்திர பயிற்சிகளை தென் கொரிய ராணுவம் தொடங்கியுள்ளது. தென் கொரியாவில் டோக்டோ என்றும் ஜப்பானில் தாகேஷிமா என்றும் அழைக்கப்படும் தீவுகளின் இறையாண்மை குறித்து சியோலும் டோக்கியோவும் முரண்படுகின்றன. இந்தத் தீவு கிழக்கு கடல் என்றும் அழைக்கப்படும் ஜப்பான் கடலில் அண்டை நாடுகளுக்கு இடையில் அமைந்துள்ளது,

டோக்கியோ ஒலிம்பிக் இணையதளத்தில் இந்த குறிப்பிட்ட தீவுகளை ஜப்பானிய பிரதேசமாகக் குறிக்கும் வரைபடம் தொடர்பாக தென் கொரியா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து பல தசாப்தங்களாக நீடித்த சர்ச்சை மீண்டும் எழுப்பப்பட்டது.

டோக்டோ தீவு தனது என்று கூறிய சியோலின் கோரிக்கையை டோக்கியோ நிராகரித்தது. இந்த மோதலுக்கு மத்தியஸ்தம் செய்யுமாறு தென் கொரியா சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் கேட்டுக் கொண்டது. அதுமட்டுமல்ல, ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் சில தென் கொரிய அரசியல்வாதிகள் தெரிவித்தனர்.

Also Read | North Korea: POP இசை கேட்டால் மரண தண்டனை; கிம் ஜாங் உன் மக்களுக்கு எச்சரிக்கை

1910-45 காலகட்டத்தில் ஜப்பானின் காலனித்துவ ஆட்சியின் போது, ஜப்பானிய நிறுவனங்களில் கட்டாயமாக வேலை செய்ய வைக்கப்பட்டவர்கள், ராணுவ விபச்சார விடுதிகளில் பணிபுரிய கட்டாயமாக்கப்பட்ட்வர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கின்றன.

தென்கொரியா தற்போது தொடங்கியிருக்கும் பயிற்சியில், கடற்படை, விமானப்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படைகள் இணைகின்றன. கொரோனா வைரஸ் கவலைகள் காரணமாக துருப்புக்களுக்கு இடையே குறைந்த தொடர்பு இருக்கும் என்று சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் இங்கிலாந்தில் நடந்த குரூப் ஆஃப் செவன் உச்சி மாநாட்டில் தென்கொரியா மேற்கொள்ளும் பயிற்சிகள் தொடர்பாக ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா (Yoshihide Suga),   தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடனான திட்டமிட்ட பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதாகவும் தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Also Read | Sputnik Vaccine: குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆய்வுகளில் இறுதி கட்டத்தில் ரஷ்யா

பயிற்சிகள் தொடர்பாக சர்ச்சை ஏற்படும்போது, ஏன் அதை நிறுத்தகூடாது என்று கேட்கப்பட்டதற்கு, "எங்கள் பிரதேசத்தை பாதுகாக்கும் நோக்கத்திற்காக ஆண்டுதோறும் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன" என்று தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீவுகளைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் 1986 முதல் ஆண்டுக்கு இரண்டு முறை தென் கொரியா பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது ஜப்பானில் அடிக்கடி எதிர்ப்புக்களைத் தூண்டுகிறது.

சர்ச்சைகளுக்கு உள்ளான தீவுகள் வரலாறு மற்றும் சர்வதேச சட்டத்தின்படி, ஜப்பானிய பிரதேசங்கள் என்று கூறும், கட்டோ (Kato) டோக்கியோ சியோலுடன் இது தொடர்பாக பேசுவதாக தெரிவித்தார்.  

"இந்த வகையான பயிற்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மிகவும் வருந்தத்தக்கது" என்று ஜப்பானின் அமைச்சக தலைமைச் செயலர் Katsunobu Kato அவர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். "நாங்கள் தென் கொரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம், பயிற்சிகளை நிறுத்துமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்."

Also Read | 2021 ஆம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த 10 நகரங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News