UK PM: இங்கிலாந்தின் பிரதமராவாரா இந்திய வம்சாவளி ரிஷி சுனக்: பிரசாரம் தொடங்கியது

Rishi Sunak Campaign For UK PM: இங்கிலாந்தின் பிரதமராகவும், பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும் பதவியேற்பாரா இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 8, 2022, 10:10 PM IST
  • இங்கிலாந்தை ஆள்வாரா இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர்
  • இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை ரிஷி சுனக்
  • பிரிட்டனின் அடுத்த பிரதமராக பிரச்சாரத்தை தொடங்கினார் ரிஷி சுனக்
UK PM: இங்கிலாந்தின் பிரதமராவாரா இந்திய வம்சாவளி ரிஷி சுனக்: பிரசாரம் தொடங்கியது title=

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெள்ளிக்கிழமையன்று பிரதமர் வேட்பாளராக தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

தனது பிரச்சாரத்தின் போது, சுனக் தனது இந்திய பாரம்பரியத்தை முன்நிறுத்தி பேசினார். தனது குடும்பம் தனக்கு எல்லாமே என்று கூறிய அவர், இந்திய பாரம்பரியத்தையும், குடும்ப அமைப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஆறுதல்ல் கூறும்  விசித்திரக் கதைகளை வழங்கும் வேட்பாளராக தாம் இருக்கமாட்டேன் என்றும் ரிஷி சுனக் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஒரு டிவிட்டர் பதிவை பகிர்ந்துள்ளார். அதில், 

“யாராவது இந்த தருணத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அதனால்தான் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராகவும், உங்கள் பிரதமராகவும் நான் முன் நிற்கிறேன்” என்று சுனக் தனது விட்டரில் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | பிரிட்டன் புதிய பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்???

பிரிட்டனின் பிரதமராகும் போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியினரில் முன்னணியில் இருக்கும் வேட்பாளர் ரிஷி சுனக் என்று முன்னரே கணிக்கப்பட்டது. போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக், போரிஸ் ராஜினாமா செய்த உடனேயே தானும் பதவியில் இருந்து விலகினார்.

ரிஷி சுனக்கின் பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ரிஷியின் தாத்தாவும் பாட்டியும் பிரிட்டிஷ் இந்தியாவின்  பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள். 1960 இல் பிரிட்டனுக்கு சென்று அங்கு தங்கள் வாழ்க்கையை தொடர்ந்தார்கள்.

சுனக்கின் தந்தை யாஷ்வீர் கென்யாவில் பிறந்து அங்கு வளர்ந்தார். ரிஷி சுனக்கின் தாய் உஷா தான்சானியாவில் பிறந்தார். கொரோனா காலத்தில், ரிஷி சுனக், நிதியமைச்சராக பிரிட்டனின் பொருளாதாரத்தை சிறப்பான முறையில் நடத்தி பாராட்டுதல்களை பெற்றார். இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியின் கணவர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அடுத்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரதமராக இவர் பதவி ஏற்கலாம் 

முன்னதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செயல்பாடுகளால் அமைச்சர்கள் பலருக்கு அதிருப்தி ஏற்பட்ட நிலையில், பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் பதவி விலகுவது நாட்டுக்கும், கட்சிக்கும் உகந்ததாக இருக்கும் என பலர் அவரிடம் நேரடியாக தெரிவித்தனர்.

இதை பற்றி வெளிப்ப்டையாக பேசிய மிக்கேல் கோ என்ற அமைச்சரை போரிஸ் ஜான்சன் பதவியிலிருந்து நீக்கினார். அதையடுத்து, பல அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதனால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பான சூழ்நிலைய்லி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

மேலும் படிக்க | விளாடிமிர் புடின் பெண்ணாக இருந்திருந்தால் போரிட்டிருக்க மாட்டார்: பிரிட்டன் PM போரிஸ் ஜான்சன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News