அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூரியர் நிறுவனமான ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஃபிரடெரிக் ஸ்மித் பதவி விலகியதைத் தொடர்ந்து, கேரளாவை பூர்வீகமாக கொண்ட ராஜ் சுப்ரமணியம் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூன் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார். ஃபெடெக்ஸ் குழுமத்தில் ஃபெடெக்ஸ் எக்ஸ்ப்ரஸ், ஃபெடெக்ஸ் க்ரவுண்ட், ஃபெடெக்ஸ் ஃப்ரெய்ட், ஃபெடெக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் படிக்க | ட்விட்டர் CEO ஜேக் டார்ஸி ராஜினாமா; புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ராஜ் சுப்ரமணியம், மும்பை ஐஐடியில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சைராகஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் பட்டமும், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார். கடந்த 1991-ம் ஆண்டு ஃபெடெக்ஸ் நிறுவனத்தில் இணைந்த ராஜ் சுப்ரமணியம், ஃபெடெக்ஸ் எக்ஸ்ப்ரஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஃபெடெக்ஸ் கார்ப்பரேஷனின் நிர்வாக துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஃபெடெக்ஸ் இயக்குநர்கள் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜ் சுப்ரமணியத்தின் நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்மித், ராஜ் சுப்ரமணியம் ஒரு திறமையான தலைவர் எனவும், ஃபெடெக்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வார் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர் என உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர்களே பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IBM நிறுவன புதிய தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா நியமனம்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G