இந்தியா மற்றும் சீனா இடையே சமாதான முடிவு!

Last Updated : Aug 28, 2017, 12:58 PM IST
இந்தியா மற்றும் சீனா இடையே சமாதான முடிவு! title=

இந்தியா மற்றும் சீனா சிக்கிம் எல்லையிலிருந்து நிலைநிறுத்தப்பட்டிருந்த தங்களது படைகளை திரும்பபெற முடிவு செய்துள்ளன.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ட்விட்டரில் இதுகுறித்து "இந்திய சீன எல்லையிலிருந்து நிலைநிறுத்தப்பட்டிருந்த தங்களது படைகளை திரும்பபெற முடிவு செய்துள்ளது' என பதிவிட்டுள்ளார்.

"சமீபத்திய காலமாக இந்தியாவும் சீனாவும் டோக்லாம் சம்பவத்தில் சர்ச்சையான கருதுக்களை கடைபிடித்து வந்தன. இந்நிலையில் தற்போது அதற்கான சசுமுகமான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 

 

 

முன்னதாக:-

1962-ம் ஆண்டு இந்தியா, சீனா இடையே நடந்த போருக்குப் பிறகு கடந்த 1 மாதமாக இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இதையடுத்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டது. சிக்கிம் அருகே சீன எல்லையில் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக, கூடுதல் படையினரை இந்தியா குவித்துள்ளது.

இந்தியா-பூடான்-திபெத் (சீனா) எல்லைகளின் சந்திக்கும் பகுதியானது டோகா லா. அதன் அருகே லால்டன் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் 2 பதுங்கு குழிகளை அமைத்தது. 

இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இந்த 2 குழிகளையும் அகற்று மாறு சீன ராணுவம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் உஷார்படுத்தப்பட்டது.

அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த இந்திய ராணுவம், அந்த இரு நிலைகளும் பாதுகாப்புக்கு உதவிகரமாக இருக்கும் என்று கருதி, அவற்றை அகற்ற மறுத்துவிட்டது.

ஆனால், அந்த இரு ராணுவ நிலைகளையும், புல்டோசர் உதவியுடன் சீன ராணுவம் கடந்த ஜூன் மாதம் 6}ஆம் தேதி இரவோடு இரவாக இடித்துத் தள்ளியது. மேலும், அங்கு சாலை அமைக்கும் பணியிலும் சீன ராணுவம் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதையடுத்து, அங்கு முன்னேறிய இந்திய ராணுவம், சீன ராணுவத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திவிட்டது.

மேலும், அருகில் உள்ள முகாம்களில் இருந்தும் இந்திய வீரர்கள் அங்கு குவிந்தனர். அப்போது, இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்து, கைகலப்பு ஏற்பட்டது. 

இதனிடையே, சிக்கிம் மாநிலம் வழியாக, திபெத்தில் உள்ள கைலாச மானசரோவருக்கு யாத்திரை சென்ற முதல் குழுவினர், நாதுலா கணவாய் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பிறகு, பயணத்தைத் தொடர முடியாமல் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர்.

அதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் சிக்கிம் எல்லையில் இருந்து இந்திய ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்று கூறினார்.

மேலும், கடந்த 1962-ம் ஆண்டு நிகழ்ந்த போரில், சீனாவிடம் இந்தியா தோல்வியடைந்ததை நினைவுபடுத்தும் விதமாக, முந்தைய வரலாற்றில் இருந்து இந்திய ராணுவம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அருண் ஜேட்லி கடந்த 1962-ம் ஆண்டில் இருந்த நிலை, இப்போது இல்லை என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், 1962-ம் ஆண்டின் நிலைமையை சீனா நினைவுபடுத்த விரும்பினால், 2017-ம் ஆண்டின் நிலைமை வேறு விதமாக இருக்கும் என்றார்.

அதையடுத்து, இந்தியா, சீனா இடையே நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இருநாட்டுத் தூதரகங்கள் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங் கூறினார்.

அதைத் தொடர்ந்து, சீனாவின் செயல்பாடு, இந்தியா}சீனா இடையேயான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கவலை தெரிவித்திருந்தது.

Trending News