இறந்த பின் ஐஸ்பெட்டியில் நெடு நேரம் வைக்கப்பட்டவர் ‘குறட்டை’ விட்ட திகில் சம்பவம்

ஸ்பெயினில் மூன்று மருத்துவர்களால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டவர், பிரேத பரிசோதனைக்கு சற்று முன்னர் உயிருடன் கண்டறியப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 26, 2021, 02:32 PM IST
இறந்த பின் ஐஸ்பெட்டியில் நெடு நேரம் வைக்கப்பட்டவர் ‘குறட்டை’ விட்ட திகில் சம்பவம்  title=

இது விந்தைகள் நிறைந்த உலகம். உலகின் அனைத்து இடங்களிலும் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. உண்மை சம்பவங்கள் சில நேரங்களில் புனைகதைகளை விட வினோதமானவையாக உள்ளன. ஸ்பெயினில் ஒன்றல்ல, மூன்று மருத்துவர்களால் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டவர், பிரேத பரிசோதனைக்கு சற்று முன்னர் கண் விழித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சயின்ஸ்அலெர்ட் (ScienceAlert)  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. 2018, ஜனவரி 7ம் தேதி அன்று ஸ்பெயினின் சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி கோன்சலோ மோன்டோயா ஜிமெனெஸ் (Gonzalo Montoya Jimenez) மயங்கி விழுந்தார்.

சிறைச்சாலையில் அன்றைய தினம் பணியில் இருந்த இரண்டு மருத்துவர்கள் இவரை சோதித்தனர். இருவரும் அந்த கைதி இறந்து விட்டதாக அறிவித்தனர்.இறப்பை உறுதிப்படுத்த, ஒரு தடயவியல் மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அவரும், கைதி இறந்ததாக அறிவித்தார்.

ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

ஒரு கைதி இறந்தால், பின்பற்றப்படும் விதிமுறைகளை பின்பற்றி ஜிமெனெஸ் உடல் பையில் வைக்கப்பட்டு சவக்கிடங்கின் குளிர் சேமிப்பு கிடங்கில் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டார். இந்நிலையில், சவக்கிடங்கில் பணியில் இருந்த மருத்துவர்களுக்கு குறட்டை சத்தம் கேட்டது. அவர்கள் பரிசோதித்து பார்த்ததில், ஜிம்னெஸ் வைக்கப்பட்ட பெட்டியில் இருந்து குறட்டை சத்தம் வருவது கேட்டது. 

அவர்கள் உடனே அவரை வெளியே எடுத்து பார்த்ததில் ஜிமெனெஸ் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. ஐஸ் பெட்டியில் நெடு நேரம் வைக்கப்பட்ட பின்னும் அவர் இறக்காமல் இருந்தது அதிசயம் தான் என கூறப்பட்டது.

பின்னர் அவர் ஒரு மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட பின். அவர் உடல் நிலை சீரானது.
மருத்துவமனை அதிகாரிகள் இது குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்த போது, இது கேடலெப்சி (Catalepsy)  வகையை சேர்ந்த ஒரு நிகழ்வாக இருந்திருக்கலாம், இதில் மனித உடல் வலிப்பு அல்லது டிரான்ஸ் போன்ற நிலைக்குள் ஆளாகி உணர்வுகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என கூறினர். அப்போது அவர்கள் உடலில் இயக்கம் ஏதும் இருக்காது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஜிமெனெஸ் சரியான நேரத்தில் விழித்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க கூட அச்சமாக உள்ளது. 

ALSO READ | NASA - SpaceX ஒப்பந்தம்: செவ்வாய்க்கு பிறகு வியாழன் கிரகத்தை குறி வைக்கும் நாசா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News