"கணவரை கொல்வது எப்படி?" கதைபோல கணவரை கொலை செய்த பெண் எழுத்தாளர்!

போர்ட்லேண்ட்டில், தனது கணவரை சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட எழுத்தாளர் மீதான விசாரணை கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 6, 2022, 08:30 PM IST
  • "தி ராங் ஹீரோ", "தி ராங் பிரதர்" மற்றும் "தி ராங் ஹஸ்பண்ட்" போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய புத்தகத் தொடரை எழுதிய எழுத்தாளர்.
  • "உங்கள் கணவரை எப்படி கொலை செய்வது" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார்.
"கணவரை கொல்வது எப்படி?" கதைபோல கணவரை கொலை செய்த பெண் எழுத்தாளர்! title=

நான்சி கிராம்ப்டன் ப்ரோபி என்பவர் ஒரு பெண் எழுத்தாளராவார். இவர்  "தி ராங் ஹீரோ", "தி ராங் பிரதர்" மற்றும் "தி ராங் ஹஸ்பண்ட்" போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய புத்தகத் தொடரை எழுதி பிரபலமடைந்தார். 

நான்சி கிராம்ப்டன் ப்ரோபி தனது கணவர் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு "உங்கள் கணவரை எப்படி கொலை செய்வது" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். 

செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு இவரது கணவர் டேனியலின் உடல் போர்ட்லேண்டில் உள்ள ஒரேகான் சமையல் நிறுவனத்தில் கண்டெடுக்கப்பட்டது. 

Nancy - Daniel

கணவர் டேனியல் ப்ரோபி கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக குற்றவாளியாக நான்சி கிராம்ப்டன் கைது செய்யப்பட்டார். பிறகு கடந்த 4 ஆண்டுகளாக நான்சி போலீஸ் காவலில் இருந்து வருகிறார். 

இந்நிலையில் அவரது வழக்கு விசாரணை ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டு நீதிமன்றத்தில், ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்கப்பட்டது. விசாரணை ஏழு வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை புலனாய்வாளர்கள் நடத்திய விசாரணையில், டேனியல் துப்பாக்கியால் சுட்டு கொள்ளப்பட்டுள்ளார் எனவும், கட்டாயப் படுத்தப்படவில்லை எனவும், அடித்து தாக்கப்படவில்லை எனவும் தெரியவந்தது.

மேலும் படிக்க | கட்டடத்தின் மீது சரிந்த தேர்..! பாகுபலி சிலை போல நிறுத்திய பக்தர்கள்! வைரல் வீடியோ!

டேனியல் ப்ரோபியிடம் பணப்பை, செல்போன் மற்றும் கார் சாவிகள் இருந்தன என்று ஆவணங்களும் கூறுகின்றன. இதனால் அவரிடம் கொள்ளை அடிக்கப்படவில்லை என்றும் தெரியவந்தது.

சிசிடிவியில் கிராம்ப்டன்-ப்ரோஃபி குடும்பத்தின் மினிவேன் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு வந்து சென்றது பதிவாகியுள்ளன.

மேலும் நான்சி கிராம்ப்டன் தன் கணவரை $1.4 மில்லியன் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசிக்கு ஆசைப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கொலை சம்பவத்திற்கு முன்னதாக நான்சி கிராம்ப்டன் ஆன்லைனில் துப்பாக்கி ஒன்றை வாங்கி பின்னர் அதை மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதன்மூலம் நான்சி தான் கொலை குற்றவாளி என குடும்பத்தாரும், நண்பர்கள் வட்டாரமும் தற்போது எண்ணுகிறது.

மேலும் படிக்க | ஒரே ‘பைக்கில்’ 7 பேர் பயணம்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News