காபூல்: ஆப்கான் மக்களின் அச்சம் வீணானது அல்ல, அதற்கு ஒரு நியாயமான காரணம் இருக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானின் (Afghanistan) தகர் மாகாணத்தில், தாலிபான் அரசாங்கம் ஒரு குழந்தையை கொடூரமாக தூக்கிலிட்டுள்ளது.
பஞ்ஷிர் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகளை கவர் செய்யும் ஒரு சுயாதீன ஊடகமான பன்ஜ்ஷிர் அப்சர்வர் இந்த மரணதண்டனை பற்றி தெரிவித்துள்ளது.
"தக்ஹார் மாகாணத்தில் தலிபான் போராளிகளால் ஒரு குழந்தை தூக்கிலிடப்பட்டது. அக்குழந்தையின் தந்தை எதிர்ப்பாளர்கள் குழுவில் பங்கு கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டதால் குழந்தைக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. #WarCrimes #Afghanistan" என்று பஞ்ச்ஷீர் அப்சர்வர் ஊடகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
தாலிபான் (Taliban) ஆப்கானை அக்கிரமித்த பிறகு, ஆப்கான் முழுதும் பல எதிர்பாளர்கள் கிளம்பினர். ஆனால், தாலிபானுக்கு எதிராக எழுந்த அனைத்து குரல்களும் நசுக்கப்படுகின்றன. இதில், தாலுபான்கள் எந்த கருணையையும் காட்டுவதில்லை. எதிர்ப்பாளர்களை தண்டிக்க சிறு குழந்தைகளை கூட எந்த வித இரக்கமும் இன்றி தண்டிக்கிறார்கள். தாலிபானின் அராஜகத்திற்கு இந்த சம்பவமே பெரிய சாட்சியாக இருக்கிறது.
ALSO READ: ஆப்கான் மக்களுக்கு புதிய பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டை: தாலிபான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் முற்றுகைக்குப் பிறகு தாலிபான்கள் சர்வதேச நம்பிக்கையைப் பெறும் முயற்சியில், தங்களைப் பற்றிய உயர்ந்த பிம்பத்தை உலகுக்கு முன் வைக்க முயன்றனர். ஆனால் தீவிரவாத குழுவான தாலிபான், அதே தீவிரமான மற்றும் வன்முறை கலந்த மனநிலையுடன்தான் இருக்கிறது என்பதற்கு காபூல் விமான நிலையத்தின் காட்சிகள் சான்றாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தாலிபான்களின் முந்தைய ஆட்சியில் வன்முறை அவர்களின் ஒரு ஒருங்கிணைந்த பண்பாக இருந்தது. இந்த முறை எந்த வித வன்முறையும் இல்லாமல் காபூலில் (Kabul) அதிகார பரிமாற்றம் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ஊடக அறிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைப்பற்றியதால், ஆப்கானிஸ்தான் பெண்களின் நிலை மிக பரிதாபமாக இருக்கும் என்றும், அவர்களுக்கு நிச்சயமற்ற எதிர்காலமே காத்திருக்கிறது என்றும் நிபுணர்களும் நம்புகின்றனர்.
ALSO READ: PoK-வை முதலில் காலி செய்யுங்கள்: UNGA-வில் பாகிஸ்தானுக்கு இந்தியா காட்டமான பதில்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR