புதுடெல்லி (New Delhi): சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய போது அதைக் கண்டறிந்த மருத்துவர், வுஹானில் ஆரம்பத்தில் கொடிய நோயின் தீவிரத்தை உள்ளூர் அதிகாரிகள் மூடிமறைத்ததாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். விசாரணை தொடங்குவதற்கு முன்பே அதிகாரிகள் ஆதாரங்களை அழித்ததாக டாக்டர் குவோக்-யுங் யுயென் (Dr Kwok-Yung Yuen) கூறினார்.
வுஹான் நகரில் COVID-19 க்கு எதிரான விசாரணையில் உதவிய ஹாங்காங்கின் நுண்ணுயிரியலாளர், மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரும் ஆன பேராசிரியர் Dr Kwok-Yung Yuen, வைரஸ் பரவலின் மையப்பகுதி யான வுஹானை விசாரணைக் குழு அடைந்த நேரத்தில் நகரம், ஹுவானன் வனவிலங்கு சந்தையில் அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டதோடு, விசாரணை நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் இருந்ததாக அம்பலப்படுத்தியுள்ளார்.
"நாங்கள் ஹுவானன் சந்தைக்கு சென்ற போது, அங்கு முன்ன்ரே சுத்தமாக இருந்ததால் பார்க்க எதுவும் இல்லை. அந்த இடத்தின் விசாரனை மேற்கொள்ள எதுவுமே இல்லை எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. மனிதர்களுக்கு வைரஸை பரப்பக் கூடிய எதையும் எங்களால் அடையாளம் காண முடியவில்லை, ”என்று யுயென் பிபிசியிடம் கூறினார்.
"வுஹானில், அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன என்று நான் சந்தேகிக்கிறேன். உடனடியாக தகவல்களை அனுப்ப வேண்டிய உள்ளூர் அதிகாரிகள் இதை உடனடியாக செய்ய அனுமதிக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
ALSO READ | கூரான கத்தியை விழுங்கிய நபர்… சவாலான அறுவை சிகிச்சை செய்த AIIMS மருத்துவர்கள்
கொடிய கொரோனா வைரஸ் உலகை ஆட்டி படைத்து வருகிறது, சீனாவின் வுஹானில் இருந்து வைரஸ் பரவல் தொடங்கியது என முதல் அறிக்கைகள் டிசம்பரில் வெளிவந்தன. உலகளவில் 1 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பாதித்து ஆறரை லட்சத்திற்கும் அதிகமான மக்களின் உயிரைக் கொன்ற இந்த கொடிய கொரோனா வைரஸ், உலகப் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க செய்துள்ளது.
COVID-19 பரவலின் தீவிரத்தை சீனா உலகிற்கு எச்சரிக்கவில்லை என்று பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. வுஹான் நகரில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்து, வைரஸை சீனா உலகிற்கு பரப்பியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனா பரவல் குறித்து உலகை முதலில் எச்சரித்த டாக்டர் லீ வென்லியாங் (Dr Li Wenliang), தகவலை கசிய விட்டதற்காக தண்டிக்கப்பட்டார் என கூறப்பட்டது. இறுதியில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இந்த பிப்ரவரியில் அவர் இறந்தார்.
சீனாவில் இப்போது கொரோனா வைரஸ் இரண்டாவது முறையாக பரவி வருவதாக அஞ்சப்படுகிறது. வடமேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் கண்டறியப்பட்டன. நேற்று, சீனாவில், 61 புதிய கோவிட் -19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. ஏப்ரல் மாதத்திலிருந்து பார்க்கும் போது, தினசரி தொற்று எண்ணைக்கையில், மிக அதிக அளவாகும்.