2020 ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியில்லை: ஹிலாரி கிளின்டன்

2020 ஆம் ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியில்லை என ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார்!!

Last Updated : Mar 6, 2019, 09:45 AM IST
2020 ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியில்லை: ஹிலாரி கிளின்டன் title=

2020 ஆம் ஆண்டு நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியில்லை என ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார்!!

முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவியும் முன்னாள் மாகாண செயலாளருமான ஹிலாரி கிளின்டன் நேற்று அமெரிக்க தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்றார்.கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த அந்நாட்டு அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்பை எதிர்த்து களமிறங்கிய அவர், தோல்வியடைந்தார். இதனால் ஹிலாரி இம்முறை போட்டியிடுவார் எனக் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். 

மேலும், தேர்தலில்  போட்டியிடவில்லை என்றாலும் அமெரிக்க மக்களுக்கு நிலவிவரும் பிரச்சினைகள் குறித்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கலந்துரையாடிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தற்கால சூழ்நிலை எதுவும் சரியாக இல்லை. இன்றைய சூழலில் பல விஷயங்கள் என்னைக் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது. நமக்கிடையே பல பிரச்னைகள் உள்ளன. தீர்க்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்ட பல நிறைவேற்றப்படவேயில்லை.

தேர்தலையும் தாண்டி தொடர்ந்து மக்கள் பணியில் இருப்பேன். தீர்க்கப்படாதைவை இந்த ஆட்சியில் அதிகம் உள்ளன” என ட்ரம்ப் அரசுக்கு எதிராகவும் ஹிலாரி தெரிவித்துள்ளார்.

 

Trending News