ஹவாய் எரிமலை வெடிப்பின் தாக்கத்தால் கபோஹோ (Kapoho) கடல் பரப்பு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது!!
ஹவாய் தீவின் கிலவேயா எரிமலையிலிருந்து வெளியேறிவரும் லாவாக்கள் நிலப்பரப்பைக் கடந்து, கடற்பரப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. இதனொரு பகுதியாக, கபோஹோ கடலில் லாவாக்கள் கலப்பதால் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தனித்தீவு உருவாக்கப்பட்டது போல் காட்சி அளிக்கிறது. நீரும், நெருப்பும் சங்கமிப்பதால் திரவமாக இருக்கும் லாவாக்கள், கருப்பு நிற பாறைகளாக உருமாறி வருகின்றன.
இதனால் கடல்வளம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தூய்மையான நீர் இருப்பைக் கொண்டுள்ள ஏரிப்பரப்பும் லாவாக்களின் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளது.