Haibatullah Akhunzada: இவர் தான் ஆப்கானின் சுப்ரீம் லீடர் என அறிவித்த தாலிபான்

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான், ஆப்கானின் புதிய அரசின் சுப்ரீம் லீடராக ஹைபத்துல்லா அஹுன்ஸாடா புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் தலைவராக இருப்பார் என அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 2, 2021, 11:51 AM IST
  • ஹைபத்துல்லா அகுன்சாடா புதிய ஆப்கானிஸ்தான் அரசின் தலைவராக இருப்பார் என தகவல்
  • தாலிபானின் புதிய அரசில் பிரதமர் பதவி இருக்கும்.
Haibatullah Akhunzada: இவர் தான் ஆப்கானின் சுப்ரீம் லீடர் என அறிவித்த தாலிபான்  title=

 

காபூல்: ஆப்கானிஸ்தானில் புதிய தாலிபான் அரசில், அனைத்து அதிகாரமும் பெற்ற சுப்ரீம் தலைவராக ஹைபத்துல்லா அஹுன்ஸாடா (Haibatullah Akhunzada)இருப்பார் என்று தலிபான்கள் புதன்கிழமை தெரிவித்தனர்.  புதிய அரசாங்கத்தில் ஒரு பிரதமர் பதவியும் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாக, டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

"தாலிபானின் (Taliban) தலைவரான முல்லா ஹைபத்துல்லா அஹுன்ஸாடா (Haibatullah Akhunzada), புதிய அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராகவும் இருப்பார்" என்று தாலிபானின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் அனாமுல்லா சமங்கனி தகவல் தெரிவித்தார்.

"நாங்கள் அறிவிக்கும் இஸ்லாமிய அரசு மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். அரசாங்கத்தில் விசுவாசமான தளபதியான ஹைபத்துல்லா அஹுன்ஸாடா இருப்பதில் சந்தேகம் இல்லை. அவர் அரசாங்கத்தின் சுப்ரீம் தலைவராக இருப்பார்," என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், தாலிபான்கள் செப்டம்பர் 3 ஆம் தேதி,  ஆப்கானிஸ்தானில் (Afghanistan)  புதிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவிப்பார்கள் என்று ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் முல்லா பராதர் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

ALSO READ: Afghan Update: கண்மூடித்தனமான கொண்டாட்டம், வெற்றிக் களிப்பின் உச்சியில் விபத்து!!

தாலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசனைகளை நடத்தி,  இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறினாலும், அமைப்பின் பெயர், தேசியக் கொடி அல்லது தேசிய கீதம் குறித்து விவாதங்கள் நடத்தப்படவில்லை என்று டோலோ நியூஸ் (Tolo News) தெரிவித்துள்ளது.

ALSO READ: ஆப்கானிலிருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்; அடுத்தது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News