Shooting In California: அமெரிக்காவின் காலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பார்க் நகரில் சீன புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற இருந்த நிலையில், சனிக்கிழமை இரவு ஒருவர் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
அமெரிக்க நேரப்படி, நேற்றிரவு 10 மணியளவில், மான்டேரி பார்க்கிலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் சீன புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்துள்ளன. அந்த நேரத்தில்தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
மேலும் படிக்க | தாலிபான்களுக்கு பயந்து துணிக்கடை பெண் பொம்மைகளும் ‘மாஸ்க்’ அணிந்துள்ள அவல நிலை!
இதில், எத்தனை பேர் உயிரிழந்தனர், காயமடைந்தனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், அந்த பகுதியில் கொண்டாட்டத்திற்காக நூற்றுக்கணக்காணோர் கூடியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1/ #USA
There was a shooting in Monterey Park in California, killing 10 people. At least 9 more were injured.
At the time, the neighbourhood was celebrating Chinese New Year. According to police, the attacker is still at large, his motives are unknown. pic.twitter.com/tyCQxBT9Mn
— David Kime (@CyberRealms1) January 22, 2023
துப்பாக்கிச்சூட்டிற்கு பின் சமூக வலைதளங்களில் வெளியான சில வீடியோக்களில், அவசர பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி மேற்கொண்டு வருவது தெரிந்தது. மேலும், போலீசார் அந்த பகுதியை முழுவதுமாக சுற்றிவளைத்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
அந்த பகுதியில் இருந்த உணவகத்தின் உரிமையாளர் ஒருவர்,"துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் அச்சமடைந்து, எனது கடைக்குள் சிலர் தஞ்சமடைந்தனர். மிஷின் கன் வைத்திருந்த ஒருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக என்னிடம் கூறினர்" என்றார். அந்த பகுதியில் இருந்த நடன கிளப் ஒன்றில்தான் துப்பாக்கிச்சூடு முதலில் நடந்ததாக கருதப்படுகிறது. சம்பவம் நடந்த மான்டேரி பார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நகரில் இருந்து 11 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள நகரமாகும்.
மேலும் படிக்க | சீட் பெல்ட் அணியவில்லை... பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதித்த காவல் துறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ