உலகையே பாதுகாக்க முயற்சித்த நோபல் வெற்றியாளர்... யார் இந்த மரியோ மேலினா?

Google Doodle Mario Molina: பூமியின் ஓசோன் படலம் இரசாயனங்களால் பாதிக்கப்படுவதை முதன்முதலில் கண்டுபிடித்து கூறியவர்களில் மிக முக்கியமானவரான விஞ்ஞானி மரியோ மோலினா குறித்து இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 19, 2023, 04:39 PM IST
  • இவர் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்.
  • 2020ஆம் ஆண்டில் இவர் காலமானார்.
உலகையே பாதுகாக்க முயற்சித்த நோபல் வெற்றியாளர்... யார் இந்த மரியோ மேலினா? title=

Google Doodle Mario Molina: புகழ்பெற்ற மெக்சிகன் வேதியியலாளர் டாக்டர் மரியோ மோலினாவின் 80ஆவது பிறந்தநாள் இன்று (மார்ச் 19) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கூகுள் வண்ணமயமான டூடுலுடன் கொண்டாடியது. 1995ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற மோலினா, பூமியின் ஓசோன் படலத்தைக் காப்பாற்ற ஒன்றிணைவதற்கு அரசாங்கங்களை வெற்றிகரமாக நம்பவைத்த பெருமைக்குரியவர்.

மனிதர்கள், தாவரங்கள் மற்றும் வனவிலங்குகள் என அனைத்திற்கும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பதற்கு இன்றியமையாத பூமியின் ஓசோன் கவசத்தை இரசாயனங்கள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அம்பலப்படுத்திய ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர்.

1943ஆம் ஆண்டு, மார்ச் 19ஆம் தேதி மரியோ மோலினா மெக்சிகோ நகரில் பிறந்தார். சிறுவயதில் அறிவியலின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர், தனது குளியலறையை தற்காலிக ஆய்வகமாக மாற்றினார். அவரது பொம்மை நுண்ணோக்கியில் சிறிய உயிரினங்கள் சறுக்குவதைப் பார்க்கும் மகிழ்ச்சியுடன் எதையும் ஒப்பிட முடியாது என்று கூகுள் குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க | மர்மங்கள் நிறைந்த மினசோட்டா நதி! காணாமல் போகும் நதி நீர்!

''உயர்நிலைப் பள்ளியில் சேருவதற்கு முன்பே நான் அறிவியலில் ஈர்க்கப்பட்டேன். நான் முதன்முதலில் ஒரு பழமையான பொம்மை நுண்ணோக்கி மூலம் பாராமீசியா மற்றும் அமீபாவைப் பார்த்தபோது எனது உற்சாகத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன் ”என்று டாக்டர் மோலினா நோபல் தளத்தில் ஒரு சுயசரிதையில் எழுதினார்.

பின்னர் அவர் மெக்சிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் இளங்கலைப் பட்டமும், ஜெர்மனியில் உள்ள ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். படிப்பை முடித்த பிறகு, கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி மற்றும் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றில் முதுகலை ஆராய்ச்சி நடத்த அமெரிக்கா சென்றார்.

1970களின் முற்பகுதியில், டாக்டர் மோலினா செயற்கை இரசாயனங்கள் பூமியின் வளிமண்டலத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராயத் தொடங்கினார். குளோரோபுளோரோகார்பன்கள் ஓசோனை உடைத்து புற ஊதா கதிர்வீச்சு பூமியின் மேற்பரப்பை அடைவதை முதலில் கண்டறிந்தவர்களில் இவரும் ஒருவர்.

அவரும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் தங்கள் கண்டுபிடிப்புகளை நேச்சர் இதழில் வெளியிட்டனர், இது அவர்களுக்கு 1995இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றுக்கொடுத்தது. இந்த அற்புதமான ஆராய்ச்சி மாண்ட்ரீல் நெறிமுறையின் அடித்தளமாக மாறியது, இது ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.

2013ஆம் ஆண்டில், அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவும், டாக்டர் மோலினாவுக்கு அமெரிக்காவின் மிக உயர்ந்த குடிமகன் கௌரவமான ஜனாதிபதி பதக்கத்தை வழங்கினார். டாக்டர் மோலினா தனது 77வது வயதில் அக்டோபர் 7, 2020 அன்று மாரடைப்பால் காலமானார். மெக்சிகோவில் உள்ள ஒரு முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான மரியோ மோலினா மையம், மிகவும் நிலையான உலகை உருவாக்குவதற்கான தனது பணியை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க | கை விரித்த உற்ற நண்பனான சவுதி அரேபியா... அதிர்ச்சியில் பாகிஸ்தான்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News