G-20 நாடுகளின் தலைவர்கள், சனிக்கிழமை (அக்டோபர் 30) நடைபெற்ற கலந்தலோசனையில், வரலாற்று சிறப்புமிக்க பெருநிறுவன வரி சீர்திருத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ் கார்ப்பரேட் வரி குறைந்தபட்சம் 15 சதவீதமாக இருக்கும். இந்த உச்சிமாநாட்டில் ஒப்புக்கொண்ட கார்ப்பரேட் வரி தொடர்பாக விதிகள் 2023ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்.
"அடிப்படை வரி மற்றும் லாப மாற்றத்திற்கான OECD/G20 கட்டமைப்பை, விரிவான அமலாக்கத் திட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட மாதிரி விதிகள் மற்றும் பலதரப்பு முறைமைகளை விரைவாக உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்" என்று இது தொடர்பான வரைவு திட்டத்தை பார்த்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்த வரி விதிப்பு ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளார்.
Here at the G20, leaders representing 80% of the world’s GDP – allies and competitors alike – made clear their support for a strong global minimum tax. This is more than just a tax deal – it’s diplomacy reshaping our global economy and delivering for our people.
— President Biden (@POTUS) October 30, 2021
"இந்த G-20 உச்சிமாநாட்டில், உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவிகித அளவை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் - கூட்டாளிகள் மற்றும் போட்டியாளர்கள் - வலுவான உலகளாவிய குறைந்தபட்ச வரிக்கு தங்கள் ஆதரவைத் தெளிவுபடுத்தினார்கள். இது ஒரு வரி ஒப்பந்தம் என்று சொல்வதை விட மேலானது. உலகப் பொருளாதாரத்தை மறுவடிவமைத்து, மேம்படுத்திய வடிவில் மக்களுக்கு வழங்குவது என்றே சொல்லலாம்” என்று அமெரிக்க அதிபர் வரி விதிப்பு ஒப்பந்த தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
Also Read | G-20 Summit: பிரதமர் மோடி வாடிகனில் போப்பாண்டவரை சந்தித்தார்
அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் யெலன் (US Treasury Secretary Janet Yellen) இந்த ஒப்பந்தத்தை வரவேற்றார்
"இன்று, G-20 நாடுகளின் தலைவர்கள் அனைவரும் புதிய சர்வதேச வரி விதிகள் குறித்த வரலாற்று ஒப்பந்தத்தை ஆமோதித்துள்ளனர், இதில் கார்ப்பரேட் வரிவிதிப்பில் உலகளாவிய குறைந்தபட்ச வரி விதிப்பு உட்பட, போட்டியை முடிவுக்குக் கொண்டுவரும். இது அமெரிக்காவிற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் ஒரு முக்கியமான தருணம். இந்த சாதனைக்காக பாராட்டு தெரிவிக்கிறேன்." அவர் விடுத்த ட்விட்டர் செய்தியில் தெரிவித்தார்.
Today, every G20 head of state endorsed an historic agreement on new int’l tax rules, including a global min tax that will end the damaging race to the bottom on corporate taxation. It’s a critical moment for the US & the global economy. I congratulate @POTUS on this achievement. https://t.co/bOh0O7cbnn
— Secretary Janet Yellen (@SecYellen) October 30, 2021
இந்த ஒப்பந்தம் "உலகளாவிய பொருளாதாரத்தை அமெரிக்க வணிகம் மற்றும் தொழிலாளர்களுக்கு மிகவும் வளமான இடமாக மாற்றும்" என்றும் அவர் தனது மற்றுனொரு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள்ளார்.
"இந்த ஒப்பந்தம் உலகப் பொருளாதாரத்தை அமெரிக்க வணிகம் மற்றும் தொழிலாளர்களுக்கு மிகவும் வளமான இடமாக மாற்றும். குறைந்த கட்டணங்களை வழங்குவதற்கான திறனுடன் போட்டியிடுவதற்குப் பதிலாக, அமெரிக்கா இப்போது நமது மக்களின் திறன்கள், யோசனைகள் மற்றும் புதுமைப்படுத்துவதற்கான திறமை ஆகியவற்றில் போட்டியிடும். இது நாம் வெல்லக்கூடிய ஒரு பந்தயம் என நினைக்கிறேன்" என்று அவர் கூறினார்.
ALSO READ | இந்தியா -இத்தாலி பிரதமர்கள் அதிகாரபூர்வ சந்திப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR