கடந்த சில ஆண்டுகளில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது அளவிட முடியாதபடி வளர்ந்துள்ளது. அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் என்பது வலுவாக காலூன்றிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால், பிடித்த உணவகத்தின் பிடித்த உணவை ஒரே கிளிக்கின் மூலம் வீட்டில் பெற்றுக்கொள்ளலாம் என்பதை யாருமே யோசித்திருக்க மாட்டார்கள். தொழில்நுடபம் தற்போது அதையும் சாத்தியமாக்கியுள்ளது.
தொழில்நுட்பம் எந்த அளவிற்கு உபயோகமனதா, அந்த அளவிற்கு விபரீதமானது என்பதை நிரூபிக்கும் வகையில், சம்பவம் ஒன்று நடந்துள்ளது. டெலிவரோ (Deliveroo) என்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு வந்த மெசேஞ் தான் ட்விட்டரில் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும் படிக்க | Seoul Halloween stampede: சமீபத்தில் உலகையே உலுக்கிய அசம்பாவிதங்கள்!
Deliveroo driver has gone rogue this morning pic.twitter.com/sFNMUtNRrk
— Bags (@BodyBagnall) October 28, 2022
லியம் பாக்னல் என்பவர் 'டெலிவரோ' நிறுவனத்தின், டெலிவரி முகவரிடம் பேசிய மெசேஞ் ஸ்கிரீன்ஷாட்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அந்த டெலிவரி முகவர், வாடிக்கையாளரான பாக்னலை தொடர்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். உடனே, பாக்னல் மெசேஞ் வழியாகவே ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு அந்த முகவர் அளித்த பதில்தான் வேடிக்கையின் உச்சம்.
"நீங்கள் ஆர்டர் போட்ட உணவு அருமையாக இருந்தது. நான் அதை மொத்தமாக சாப்பிட்டுக்கொள்கிறேன். நீங்கள் டெலிவரோ நிறுவனத்திடம் புகார் அளித்துக்கொள்ளுங்கள்" என கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லியம்,"நீ ரொம்ப மோசம்" என அனுப்ப, அதற்கு,"அதெல்லாம் வருதப்பட மாட்டேன்" என கூலாக பதிலளித்துள்ளார்.
இந்த ட்வீட் தற்போது பலராலும் பகிரப்பட்டும், கருத்து பதிவிடப்பட்டும் வருகிறது. இச்சம்பவம் இங்கிலாந்தில் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து, இந்த ட்வீட்டை அடுத்து, 'டெலிவரோ' நிறுவனம் இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், லியம் பாக்னலுக்கு உடனடியாக வேறு உணவு அளிக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட டெலிவரி முகவரை அவர்கள் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | முழு மானை விழுங்கிய 10 அடி ராட்சத மலைப்பாம்பு: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ