கொரோனாவுக்கு பயந்து ஆல்கஹால் குடித்த 100-க்கும் அதிகமானோர் பலி...

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் என்று நம்பி வீட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்துறை மது (ஆல்கஹால்) அருந்திய பின்னர், பலர் தங்கள் உயிரை ஆல்கஹாலுக்கு பறிகொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Mar 27, 2020, 03:32 PM IST
கொரோனாவுக்கு பயந்து ஆல்கஹால் குடித்த 100-க்கும் அதிகமானோர் பலி... title=

கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் என்று நம்பி வீட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்துறை மது (ஆல்கஹால்) அருந்திய பின்னர், பலர் தங்கள் உயிரை ஆல்கஹாலுக்கு பறிகொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று காரணமாக ஈரானில் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஈரானிய நச்சுயியல் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை நிலவரப்படி ஈரான் 5,823 கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் 145 பேரின் இறப்பு எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது, இது சீனாவுக்கு வெளியே மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும்.

இந்நிலையில் கோரானா நோயாளிகள் பலர், இணையத்தில் பரவிய தவறான வழிகாட்டுதல்களை நம்பி, வீட்டில் தொழில்துறை மது (ஆல்கஹால்) தயாரித்து அருந்தியுள்ளனர். இதன் காரணமாக ஆல்கஹால் விஷமாக மாறி அவர்களின் உயிர் பலியாகியுள்ளது.

"பெரும்பாலான நோயாளிகளுக்கு மது அருந்தினால் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க முடியும்" என்ற வறான நம்பிக்கை சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் அந்நாட்டு மக்கள் இந்த விஷப் பறிட்சை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக நோயாளிகள் மெத்தனால் பயன்படுத்தியபோது அது அதிக செறிவால் விஷமாக மாறி அவர்களை கொன்றுள்ளது.

மெத்தனால் என்பது ஒரு கரைப்பான், பூச்சிக்கொல்லி மற்றும் மாற்று எரிபொருள் மூலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்துறை ஆல்கஹால் ஆகும்.

தீவிர நிகழ்வுகளில், ஆல்கஹால் விஷம் நிரந்தர குருட்டுத்தன்மை, மூளை பாதிப்பு அல்லது மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

தொற்று நோய் நிபுணரும் ஈரானின் தேசிய காய்ச்சல் குழுவின் உறுப்பினருமான மசூத் மர்தானி, தெஹ்ரானில் உள்ள லோகம் மருத்துவமனைக்கு தினமும் ஒன்று முதல் மூன்று வழக்குகள் மது-விஷம் வருவதாக தெரிவித்துள்ளார்.

1979-ஆம் ஆண்டு முதல் ஈரானில் மது பானங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன, ஆனால் பலர், குறிப்பாக செல்வந்தர் அல்லாதவர்கள் பலர் வீட்டில்  அதிக செறிவு கொண்ட மெத்தனால் அல்லது பல்பொருள் அங்காடிகளில் கிடைக்கும் பழ சுவையுடன் கூடிய தொழில்துறை ஆல்கஹால் தயாரித்து அருந்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News