அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அதிகரித்த தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் போன்றவை பூமியை வெப்பமயமாக்கியுள்ளன. இதனால் நீர், வானம், நிலம், காற்று என அனைத்தும் மாசுபட்டுள்ளன. புவிவெப்பத்தைக் குறைக்க மரங்களை நட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தாலும் அவை காலத்தில் காற்றோடு கலந்து விடுகின்றன. மாறாக, மரங்கள் வெட்டப்படுவதும், வனங்கள் அழிக்கப்படுவதும்தான் தொடர்கின்றன.
இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று 52ஆவது புவி நாள் கொண்டாடப்படுகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் கூகுளின் முகப்பு பக்கத்தில் டூடுள் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் பல்வேறு பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் படங்கள் இடம்பெறுகின்றன.
இன்றைய நாள் முழுவதும், டூடுல் படங்கள் பூமியின் வெவ்வேறு இடங்களையும், பல ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் புவி வெப்பமடைதலின் தாக்கத்தையும் குறிக்கும் வகையில் மாறும்.
மேலும் படிக்க | உக்ரைனின் மரியுபோல் நகரை இன்று ரஷ்யா முழுமையாக கைப்பற்றும்: ரஷ்ய தரப்பு உறுதி
அந்தவகையில் ஆப்பிரிக்காவில் உள்ள கிளிமஞ்சாரோ மலையின் உச்சியில் உள்ள பனிப்பாறை உருகுதல், கிரீன்லாந்தில் உள்ள செர்மர்சூக் பனிப்பாறை உருகுதல், ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மற்றும் ஜெர்மனியில் உள்ள ஹார்ஸ் காடுகளின் மாற்றங்களை உணர்த்தும் படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க | இம்ரானின் முன்னாள் அமைச்சர்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை: ஹாபாஸ் ஷெரீப்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR