52 ஈரானிய தளங்கள் எங்கள் இலக்கில் உள்ளன: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் தாக்கும்பட்சத்தில், அதன் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்வீட் செய்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2020, 09:31 AM IST
52 ஈரானிய தளங்கள் எங்கள் இலக்கில் உள்ளன: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை title=

வாஷிங்டன்: பாக்தாத்தில் அமெரிக்க இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் தாக்கும்பட்சத்தில், அதன் முக்கிய 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என அச்சுறுத்தியுள்ளார். இதற்கிடையில், பல நாடுகள் ஈரான் மற்றும் அமெரிக்காவிடம் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

அமெரிக்க அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஈரானின் 52 தளங்கள் (ஈரானால் வைத்திருந்த 52 அமெரிக்க பிணைக் கைதிகளின் நினைவாக) தாக்கப்படும் மற்றும் ஈரான் மீது மிக வேகமாகவும் மிகவும் அழிவுகரமான தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். இனி அமெரிக்கா எந்த மிரட்டல்களையும் விரும்பவில்லை.

 

அமெரிக்க துருப்புக்கள் நிறுத்தப்பட்டிருந்த ஈராக் மறைவிடத்தில் இரண்டு ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் படி, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல் நடந்தது. இருப்பினும், இந்த விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனவும் கூறியுள்ளது.

 

இதற்கிடையில், ஈரான் மற்றும் அமெரிக்கா அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும் என்று பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் அடீரியன் ஆகியோருடன் பேசினார். மூன்று தலைவர்களும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் நிலைமை குறித்து கவலை தெரிவித்ததோடு, பல்வேறு தரப்பினரும் நிதானத்துடன் செயல்படுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

 

சிரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈராக் மற்றும் ஈரானுக்கு இரங்கல் தெரிவித்தத்தோடு, அமெரிக்காவைக் கண்டித்துள்ளது. ஈராக்கின் உறுதியற்ற தன்மைக்கு காரணம் அமெரிக்கா என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதனுடன், கத்தார் மற்றும் லெபனான் வெளியுறவு அமைச்சகமும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைமை மோசமடையக்கூடாது என்பதற்காக இருதரப்பினர் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஈரானின் தளபதி படுகொலை செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இரண்டு ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலுக்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த தாக்குதல் அமெரிக்க தூதரகம் அருகே நடந்துள்ளதால், அமெரிக்கா அதிபர் பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். 

Trending News