சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு அதிகம் செலவு வைக்கும் 9 நாடுகள்

இந்தியர்களுக்கு ரூபாய் மதிப்பு அடிப்படையில் சுற்றுலா செல்லும்போது அதிகம் செலவு வைக்கும் 9 நாடுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 10, 2024, 01:41 PM IST
  • இந்தியர்களுக்கு காஸ்டிலியான சுற்றுலா நாடுகள்
  • ரூபாய் மதிப்பை விட அந்நாடுகளின் நாணய மதிப்பு அதிகம்
  • இதனால் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும்
சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு அதிகம் செலவு வைக்கும் 9 நாடுகள் title=

இந்தியர்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா செல்கிறீர்கள் என்றால் ரூபாய் மதிப்பின் அடிப்படையில் அதிகம் செலவு வைக்கும் நாடுகளின் பட்டியலை தெரிந்துகொள்ளுங்கள். இந்திய ரூபாய் மதிப்பை விட அந்நாட்டு நாணய மதிப்பு அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். அதனால் எப்போது வெளிநாடு செல்வதற்கு முன்பும் அந்நாடுகளின் நாணய மதிப்பு இந்தியா நாணயத்துடன் ஒப்பிட்டு செலவுகளை திட்டமிட வேண்டும். 

குவைத் (குவைத் தினார்) - 1 KWD = 269.67 INR

குவைத் நாணயத்தை தினார் என அழைப்பார்கள். அந்நாட்டின் ஒரு தினார் வாங்க இந்திய ரூபாயில் 269.67 ரூபாயை செல விட வேண்டும். இங்கிருக்கும் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா தளங்கள் வெளிநாட்டு பயணிகளை மிகவும் ஈர்ப்பவை. இந்தியர்களுக்கு இந்த நாடு காஸ்டிலியான சுற்றுலா நாடு ஆகும்.

பஹ்ரைன் (பஹ்ரைன் தினார்) - 1 BHD = 220.32 INR

இங்கு இருக்கும் நாணயமும் தினார் என்றாலும் குவைத்தை விட குறைவான நாணய மதிப்பு கொண்டிருக்கிறது. அதாவது பக்ரைனில் இருக்கும் ஒரு தினார் இந்திய ரூபாய்க்கு 220 ரூபாய் 32 காசுக்கு சமம் ஆகும். பட்ஜெட் விலையில் பயணத்தை திட்டமிட்டால், இங்கு செல்வதற்கு முன்பு செலவுகளை கணக்கில் கொண்டு சுற்றுலா செல்லுங்கள். 

ஓமன் (ஓமானி ரியால்) - 1 OMR = 215.72 INR

ஓமனின் நாணயத்தின் பெயர் ரியால். அரேபிய தீபகற்பத்தில் வேடிக்கையான அனுபவங்களை கொடுக்கும் இந்நாட்டின் சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் ஒரு ரியாலுக்கு நீங்கள் 215 ரூபாய் 72 காசுகளை செலவழிக்க வேண்டியிருக்கும். 

மேலும் படிக்க | உடலுறவு... ஊரில் யாருக்கும் தூக்கமே இல்லை... இரவில் வரும் பயங்கர சத்தம் - என்ன காரணம்?

ஜோர்டான் (ஜோர்டானிய தினார்) - 1 JOD = 117.12 INR

நீங்கள் ஜோர்டானுக்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், 1 ஜோர்டானிய தினார் (JOD) இந்திய ரூபாய் மதிப்பில் 117 ரூபாய் 12 காசுகளுக்கு சமம். இது ஒரு மத்திய கிழக்கு நாடு. சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் நிதி திட்டமிடல் அவசியம். 

யுனைடெட் கிங்டம் (பிரிட்டிஷ் பவுண்ட்) - 1GBP = 104.76 INR

1 பிரிட்டிஷ் பவுண்ட் (GBP) 104.76 INR ஆக இருக்கும் என்பதால், இங்கு செல்லும் முன்பு அவசியம் நிதி திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். வெஸ்டர்ன் கலாச்சார தொட்டில் என்று அழைக்கப்படும் இங்கு சுற்றுலா பயணிகளுக்கு பல அதிசயங்கள் காத்திருக்கும். ஆனால் எல்லாவற்றுக்கும் செலவு செய்ய தயாராகிக் கொண்டு செல்ல வேண்டும். 

சுவிட்சர்லாந்து (சுவிஸ் பிராங்க்) - 1 CHF = 94.85 INR

இயற்கை எழில் கொஞ்சும் நாடு, உலகிலேயே அதிகமானோர் சுற்றுலா செல்லும் நாடு. இங்கு இருக்கும் நாணயத்தின் பெயர் சுவிஸ் பிராங். இந்திய ரூபாய்க்கு 94 ரூபாய் 85 காசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், பூமியின் சொர்க்கத்துக்கு சென்று வந்த மகிழ்ச்சியை நிச்சயம் உங்களால் பெற முடியும். 

யுனைடெட் ஸ்டேட்ஸ் (அமெரிக்க டாலர்) - 1 USD = 83.04 INR

அமெரிக்கா பற்றி பெரும்பாலும் அறிந்திருப்பீர்கள். இந்தியர்கள் அதிகமாக பயணிக்கும் நாடுகளில் ஒன்று. உலகின் காஸ்டிலியான நாடுகளில் ஒன்றான இங்கு சுற்றுலா செல்பவர்கள் இந்திய ரூபாயில் 83 ரூபாய் செலவழித்தால் தான் அந்நாட்டின் ஒரு டாலரை பெறுவீர்கள். அதனால், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப பயணத்தை திட்டமிடுங்கள். 

மேலும் படிக்க | பாகிஸ்தானை ஆளப்போவது யார்? கணிப்புகளை பொய்யாக்கும் மக்களின் வித்தியாசமான முடிவு!

Trending News