9/11 தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் செய்ய திட்டமிட்டிருந்த தீவிரவாத தாக்குதல்

ரயில்களை தடம் புரள வைப்பதும்,  எண்ணெய் டேங்கர்களை தகர்ப்பதும் என உலக மக்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை கட்டவிழித்துவிட  ஒசாமா பின்லேடனின் திட்டம் என்று தெரியவந்துள்ளது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 25, 2022, 10:22 PM IST
  • ஒசாமா பின்லேடனின் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்
  • பல பயங்கரவாதத் தாக்குதல்களை கட்டவிழித்துவிட ஒசாமா பின்லேடனின் திட்டம்
  • இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் செய்ய திட்டமிருந்த தீவிரவாத தாக்குதல்
9/11 தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் செய்ய திட்டமிட்டிருந்த தீவிரவாத தாக்குதல் title=

ரயில்களை தடம் புரள வைப்பதும்,  எண்ணெய் டேங்கர்களை தகர்ப்பதும் என உலக மக்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை கட்டவிழித்துவிட  ஒசாமா பின்லேடனின் திட்டம் என்று தெரியவந்துள்ளது. 

ஒசாமா பின்லேடன் என்ற உலகளாவிய பயங்கரவாதி (International Terrorist), 2001 இல் 3,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற சோகமான 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா மீது இரண்டாவது தாக்குதல் நடத்த திட்டமிட்டார் என்று தெரியவந்துள்ளது. 
 
ஒசாமா பின்லேடனை, கொன்ற பிறகு அவர் பதுங்கியிருந்த இடத்தில் இருந்த  காகிதங்களை அதிரடிப்படையினர் கைப்பற்றினார்கள். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

ரயில் தண்டவாளத்தில் 40 அடி பாதையை அகற்றுவதன் மூலம் இலக்குகளைத் தாக்குவதற்கும் ரயில்வேயை தடம் புரளச் செய்வதற்கும், என பல விஷயங்கள் தற்போது வெளிவந்துள்ளன.  

மேலும் படிக்க | மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்

நூற்றுக்கணக்கான மக்களைக் கொல்வதற்காக அமெரிக்க இரயில் தண்டவாளத்தில் இருந்து 12 மீட்டர் தூரத்தை துண்டிக்கும்படி பின்லேடன் தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பதை அந்த ஆவணங்கள் வெளிப்படுத்தின.

2011 இல் பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு, அமெரிக்க கடற்படை (America Navy) சீல்ஸ், 9/11 க்குப் பிறகு தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு பயணிகள் விமானங்களுக்குப் பதிலாக தனியார் சார்டட் ஜெட் விமானங்களைப் பயன்படுத்துவதை அப்போதைய அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் எவ்வாறு ஆதரித்தார் என்பதைக் குறிக்கும் ஆவணங்களை கண்டுபிடித்து வகைப்படுத்தினர். 

வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி,  அமெரிக்க குடிமக்கள் தெருக்களில் இறங்கி முஸ்லிம்கள் மக்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என தங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்று அல்-கொய்தா தலைவர் நம்பினார்.

மேலும் படிக்க | லாக்டவுன் அச்சத்தால் பெய்ஜிங்கின் கடைகளில் காலியாகும் பொருட்கள்

அல்-கொய்தாவின் நடவடிக்கைகளை அய்வு செய்யும் ஆராய்ச்சியாளரான நெல்லி லாஹவுட், 11 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க கடற்படை சீல்களால் எடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஒசாமா பின்லேடனின் தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் குறிப்புகளை ஆய்வு செய்தார்.

ஆப்கானிஸ்தானில் தனது பதுங்கிடத்தில் அமெரிக்கா தாக்குதல்களை நடத்திய விதம் ஒசாமா பின்லேடன் எதிர்பாராதது என்றும் அது அவருக்கு திகைப்பை ஏற்படுத்தியது என்றும் நெல்லி லாஹவுட் தெரிவித்தார்.

2010 இல், ஒசாமா மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் மற்றொரு தாக்குதலைத் திட்டமிட்டார், இந்த முறை பல கச்சா எண்ணெய் டேங்கர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க போக்குவரத்து தடங்களைக் குறிவைத்தார்.

மேலும் படிக்க | பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரோன் மீண்டும் தேர்வு; உலக தலைவர்கள் வாழ்த்து

துறைமுக மாவட்டங்களில் மீனவர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யலாம் என்றும், ரேடாரைத் தவிர்க்கக்கூடிய படகுகளை எங்கே கண்டுபிடிப்பது என்று அவருக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு ஒசாமா கற்றுக் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால், அமெரிக்கா ஒசாமா பின் லேடனை கண்டுபிடிப்பதில் மும்முரமாக இருந்ததால், ஒசாமா தனது கூட்டாளிகளை மூன்றாண்டுகளாக தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

ஒசாமா பின்லேடனின் மரணத்தைத் தொடர்ந்து, ஒசாமாவின் இரண்டாம் நிலைத் தளபதியான அய்மன் அல்-ஜவாஹிரி அல்-கொய்தாவின் பொறுப்பாளராக உள்ளார்.

மேலும் படிக்க | மீண்டும் எகிறும் கொரோனா எண்ணிக்கை, பாசிடிவ் விகிதம் 5% தாண்டியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News