சீன தலைநகர் பெய்ஜீங்கில் கரோனா தொற்று அதிகரிப்பதை முன்னிட்டு கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பூங்காக்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் பல்வேறு இடங்களும் மூடப்பட்டன. அந்நாட்டின் தெற்கில் அமைந்துள்ள, மிகப்பெரும் உற்பத்தி நகரமாக அறியப்படும் குவாங்சோ மற்றும் மேற்கு பகுதியின் பெருநகரமான சோங்கிங் உள்ளிட்ட நகரங்களில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஊரடங்கால் கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் சீனாவில், மொத்தம் 10 ஆயிரத்து 729 புதிய கரோனா தொற்றுகள் உருவாகியுள்ளன. இதில், தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையானோருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் பெய்ஜீங்கில், ஏறத்தாழ 2 கோடி பேர் தினமும் கரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கரோனாவை முற்றிலும் ஒழிக்க மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கை வலுத்த வந்த நிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பலரும் கட்டாயப்படுத்தி தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | 'ஆட்குறைப்புக்கு நான்தான் முழு பொறுப்பு' - மார்க் ஜுக்கர்பெர்க் பேசிய வீடியோ லீக்!
‘Zero-COVID’நடவடிக்கையாக சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே,‘Zero-COVID’நடவடிக்கையால் பள்ளிகள், தொழிற்சாலைகள், கடைகள், மாகாணங்கள், நகரங்களுக்கு இடையேயான எல்லைகள் மூடல் ஆகியவை ஏற்கெனவே, அமல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, தொற்று அதிகரிப்பால் மேலும் கட்டுப்பாடுகளையும் அதிகமாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரத்தில் ஒரே ஒரு தொற்று பாதிப்பு உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள் பெய்ஜிங்கிற்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் விசாவைப் பெறுவதற்கு ஏழு முதல் 10 நாட்களுக்கு ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மூடிக்கொண்டு வாழைப்பழத்தை சாப்பிட்ட சீன பெண்... இதுக்குமா அரசு கட்டுப்பாடு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ