புதுடெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,08,892 உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6, 06,206 உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81,34,747
இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றால் ஒரே நாளில் 40,425 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து: மூன்று மருந்தாக்கத் துறைகளின் மூலம் சுமார் 90 மில்லியன் COVID-19 தடுப்பூசிகளை வாங்கிச் சேமித்து வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் புதிதாக நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகபட்ச உயர்வை எட்டியுள்ள நிலையில் ஹாங்காங்கில் உள்ள பல சர்வதேச வங்கிகள் தங்களது பணியாளர்கள் பணிக்கு வர தற்காலிகமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் இரண்டாவது பெரிய மாகாணமான ஒசாகாவில் ஏப்ரல் 9 முதல் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு
Also Read | என்ன கொசு கடிச்சா கொரோனா வைரஸ் பரவுமா? வெளியான பகீர் தகவல்....
கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:
1. அமெரிக்கா - 37,73,260
2. பிரேசில் - 20,98,389
3. இந்தியா - 11,18,206
4. ரஷ்யா - 7,70,311
5. தென்னாப்பிரிக்கா - 3,64,328
6. பெரு - 3,53,590
7. மெக்சிகோ - 3,44,224
8. சிலி - 3,30,930
9. இங்கிலாந்து - 2,96,358
10. இரான் - 2,73,788