கம்யூனிஸ்டுகளுக்கு No Entry... ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு..!!!

சீனாவில் தோன்றி உலகையே வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2020, 05:46 PM IST
  • சீனாவில் தோன்றி உலகையே வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லை.
  • அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியிறக்க சேவைகள் பிரிவு, கொள்கை வடிகாட்டுதல் ஒன்றை வழங்கியுள்ளது.
கம்யூனிஸ்டுகளுக்கு No Entry... ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவு..!!! title=

சீனாவில் தோன்றி உலகையே வாட்டி வதைத்து வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்காமல், இப்போது அமெரிக்க அதிபர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியிறக்க சேவைகள் பிரிவு, கொள்கை வடிகாட்டுதல் ஒன்றை வழங்கியுள்ளது. 

இதன் படி, எந்த ஒரு வெளிநாட்டையும் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் அல்லது வேறு எந்த சர்வாதிகாரக் கட்சிஉறுப்பினர்களுக்கும் அமெரிக்காவில் அங்கீகாரம் இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு இருக்கும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, அதை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றபட்ட சட்டங்களின் ஒரு பகுதியாகும் இது என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியிறக்க சேவைகள் பிரிவு USICS தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கம்யூனிஸம் அச்சுறுத்தலாக இருப்பதால், நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. 

எனினும், நிர்பந்தம் காரணமாக, வேலை வாய்ப்பு, பிற வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்கான கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில் கவனிக்க பட வேண்டிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பல ஆண்டுகளுக்கு முன்,  பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலைமைச்சராக இருந்த கால கட்டத்தில், அமெரிக்க செல்ல அவருக்கு விசா வழங்கக்கூடாது என கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் கடிதம் எழுதியிருந்தனர்.

தற்போது, கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கரவாத அமைப்பை போல் தடை செய்துள்ளது அமெரிக்கா.

காட்சிகள் மாறி, அமெரிக்க தேர்தலில், மோடியின் பெயரை கூறி அதிபர் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பது கூடுதலான சுவாரஸ்யமான விஷயம். 

மேலும் படிக்க | Gilgit-Baltistan வரலாறும், பாகிஸ்தான் எடுத்துள்ள தற்கொலை முடிவும் ..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News