இந்தியாவின் அதிகரித்து வரும் இராணுவ சக்தியை கண்டு அஞ்சும் சீனா தனது மோசமான திட்டங்களை நிறைவேற்ற சைபர் ஹேக்கர்களின் உதவியை நாடுவதாக இந்தியா மற்றும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
டோக்லாமில் இந்திய ராணுவ வீரர்களுடன் சீன ராணுவ வீரர்கள் மோதிய போது, இந்தியா வலுவான பாடம் புகட்டியதால், இனி தியாவுடன் நேரடியாக போராடுவது எளிதல்ல என்று சீனா புரிந்து கொண்டுள்ளது. எனவே சீனா இந்திய ராணுவம் தனது வீரர்களை தாக்காமல், பாதுகாக்க முயல்கிறது. எனவே ராணுவத்தின் தயார்நிலை, மற்றும் உத்திகளை அறிய ஹாக்கர்கள் உதவியை நாடுகிறது. கால்வன் சம்பவத்திற்குப் பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பல முக்கிய நிறுவனங்கள் மீது 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
சைபர் அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கும் இந்தியா ஃபியூச்சர் அறக்கட்டளையின் அறிக்கையில், கால்வான் சம்பவத்திற்குப் பிறகு, சீனாவில் இருந்து மொத்தம் 40 ஆயிரத்து 300 சைபர் தாக்குதல்கள் நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டது பதிவாகியுள்ளன என்றும் கல்வான் சம்பவத்திற்கு பிறகு சைபர் தாக்குதல் சம்பவங்கள் 200 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களில் பெரும்பாலானவை மின்சாரத் துறை, வங்கி, ரயில்வே மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான நிறுவனங்கள் மீது நடத்தப்படுகின்றன. நன்கு திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தின் கீழ், சீன ஹேக்கர்கள் இந்தியாவின் கணினிகளை குறிவைப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். சைபர் தாக்குதல் நடத்தி, நாட்டின் முக்கியமான முக்கியமான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைத் திருடுவது சீனாவின் முக்கிய நோக்கம்.
சில நாட்களுக்கு முன்பு, லடாக்கில் பவர் கிரிட் மீது இதேபோன்ற சைபர் தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியானது. அமெரிக்க சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ரெகார்டட் ப்யுச்சர், லடாக்கில் உள்ள பவர் கிரிட் பற்றிய தகவல்களை சேகரிக்க சீனா ஹேக்கர்கள் உதவியுடன் சைபர் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.
மேலும் படிக்க | ஹாங்காங்கின் பிரம்மாண்ட மிதக்கும் உணவகம் ஜம்போ கடலில் மூழ்கியது
இந்தியாவின் தற்காப்புத் தயார்நிலையால் சீனா அஞ்சுகிறது. கடந்த சில ஆண்டுகளில், பிரான்ஸிடம் இருந்து வந்த ரஃபேல், அமெரிக்காவின் சக்தி வாய்ந்த அப்பாச்சி மற்றும் சினூக் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றுடன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) தொடர்ந்து புதிய ஏவுகணைகளை சோதனை செய்து வருவது சீனாவின் கவலையை அதிகரித்துள்ளது. இதனால்தான், கடந்த சில மாதங்களாக, சீன சைபர் ஹேக்கர்கள் இந்தியாவின் பாதுகாப்பு துறையுடன் இணைந்த கணினிகளை ஹேக் செய்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பெற தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
இந்தியா தனது போர் விமானங்களில் நிறுவப்பட்டுள்ள ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளையும் மற்ற ஆயுதங்களையும் எங்கு நிலைநிறுத்துகிறது என்பதைக் கண்டறிய சீனா முயற்சித்து வருகிறது. சீனாவின் சைபர் ஹேக்கர்கள் பாதுகாப்புத் துறையையும், நாட்டின் முக்கியமான துறைகளான மின்சாரம், வங்கிகள், மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் காவல் துறையின் கணினிகளையும் ஹேக் செய்ய முயற்சிக்கின்றனர்.
மாநில காவல்துறை, கூட்டுறவு வங்கிகள், துணை ராணுவப் படைகள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் அரசுத் துறைகளும் சைபர் ஹேக்கர்கள் குறி வைக்கின்றனர் எனவும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், பாதுகாப்பு மற்றும் இத்ர முக்கிய துறையை சார்ந்த நிறுவனங்களின் 11 கணினிகள் ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சைபர் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையின் ஆதாரங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க | இலங்கையை போலவே சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள பாகிஸ்தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR