ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூட அமெரிக்க உத்தரவு: பதிலடி கொடுக்க சீனா சபதம்

சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு தூதரக ஒப்பந்தம் மீறப்படுகிறது என  சீனா கடுமையாக கண்டனம் செய்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2020, 02:55 PM IST
  • சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக சீன அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
  • அமெரிக்க அரசின் இந்த செயல், சர்வதேச சட்டம், சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளை மீறுவதாக சீனா
  • சீன தூதரகத்தை மூடுமாறு திடீரென உத்தரவு மிகவும் கண்டிக்கத்தக்கது, நாடுகடத்தப்படுவதற்கு ஒப்பானது என சீனாவில் உள்ள பல்கலை கழக ஆய்வாளர் Xin Qiang கூறினார்.
ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை மூட அமெரிக்க உத்தரவு: பதிலடி கொடுக்க சீனா சபதம்  title=

பெய்ஜிங் / ஹூஸ்டன்: ஹூஸ்டனில் (Houston)உள்ள சீன தூதரக அலுவலகத்தை மூட வாஷிங்டன் புதன்கிழமை உத்தரவிட்டதால், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில்  ராஜீய நிலையில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. சைபர் உளவு நடவடிக்கை காரணமாக அமெரிக்க அறிவுசார் சொத்துக்கள் மற்றும் தனியார் தகவல்களை பாதுகாக்கும் நோக்கத்துடன்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது  .

அமெரிக்க நடவடிக்கைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த  சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின்(Wang Wenbin) இது ஆதாரமில்லாத பழிவாங்கும் நடவடிக்கை என எச்சரித்தார்.

ALSO READ | டெல்லியில் தனது மகளை கடத்தல்காரரிடமிருந்து காப்பாற்றிய வீரத்தாய்... வைரலான வீடியோ..!!!

அமெரிக்கா தான் எடுத்துள்ள தவறான முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று சீனா கோருகிறது. இல்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என  என்று அவர்  மேலும் எச்சரித்தார்.

அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் மற்றும் கான்சுலேட் அலுவலகங்களுக்கு வெடி குண்டு அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகவும் வாங் கூறினார்.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை தனது அறிக்கையில், “அமெரிக்க அறிவுசார் சொத்துக்கள் மற்றும் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்காக  ஹூஸ்டனில் உள்ள துணை தூதரகத்தை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறியது.

ALSO READ | தண்டனையைத் தவிர்க்க போலி மரண சான்றிதழ்.. எழுத்து பிழையால் சிக்கிய பரிதாபம்..!!!

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டகஸ் (Morgan Ortagus), சீனா தனது நாட்டின்  இறையாண்மையை மீறுவதையும், தனது மக்களை அச்சுறுத்துவதையும் அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது என்றார்.

அமெரிக்காவில் உள்ள சீனாவின் ஐந்து துணை தூதரகங்களில் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள துணைத் தூதரகம்  ஒன்றாகும்.  வாஷிங்டனில் (Washington DC) உள்ள தூதரகத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாக வில்லை.

கொரோனா வைரஸ் பரவல், ஹாங்காங்கில் அதன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சீனாவின் முடிவு மற்றும் வர்த்தக ரீதியிலான உறவில் ஏற்பட்ட விரிசல் உள்ளிட்ட பல விஷயங்களால், அமெரிக்கா மற்றும் சீனா இரண்டிற்கும் இடையில்,  அரசியல் ரீதியாவும், உத்தி ரீதியாகவும் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது.

ALSO READ | வாழ்விலும் சாவிலும் ஹீரோவான இளைஞர்... மூளை சாவு அடைந்ததால் உடல் உறுப்பு தானம்..!!!

சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக சீன அதிகாரிகள் குற்றம் சாட்டிய நிலையில் வுஹானில் அல்லது ஹாங்காங்கில் அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிடுவதற்கான நடைமுறையை பெய்ஜிங் ஆராய்ந்து  கொண்டிருக்கிறது.

முன்னதாக, சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், ஜூலை 21 அன்று, ஹூஸ்டனில் உள்ள சீனாவின் துணைத் தூதரகம் அனைத்து நடவடிக்கைகளையும் நிகழ்வுகளையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா திடீரென கோரியது.

அமெரிக்க அரசின் இந்த செயல், சர்வதேச சட்டம், சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகள் மற்றும் சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு தூதரக ஒப்பந்தத்தை கடுமையாக மீறுகிறது எனவும்  சீனா கடுமையாக கண்டனம் செய்தது.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குப் பிறகு துணைத் தூதரகத்தின் முற்றத்தில் ஆவணங்கள் எரிக்கப்படுகின்றன என்ற செய்தி  தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக,  ஹூஸ்டன் காவல் துறை தெரிவித்துள்ளது.

ALSO READ | அண்டார்டிகாவின் கடற்பரப்பில் மீத்தேன் கசிவு.. விஞ்ஞானிகள் கவலை.. !!!

டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூடுமாறு சீனாவை அமெரிக்கா கேட்டுக் கொண்டதாக பெய்ஜிங்கில் இருந்து வந்த செய்திகளுக்கு மத்தியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. தூதரகத்தைச் சுற்றியுள்ளவர்கள் மூலம் பகிரப்பட்ட வீடியோக்களில்,   எரிந்து கொண்டிருக்கும் பல திறந்த தொட்டிகள் அல்லது கொள்கலன்களில் பொருட்களை எறிவதைக் காணலாம்.

ஷாங்காயில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க ஆய்வுகள் மையத்தின் துணை இயக்குனர் ஜின் கியாங் (Xin Qiang) புதன்கிழமை. அரசு  பத்திரிக்கையான குளோபல் டைம்ஸிடம், சீனா-அமெரிக்க உறவுகளின் வரலாற்றில் முன்பு இல்லாத வகையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதையே இது சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார். நிச்சயமாக சீனா இதற்கு  எதிர் வினையாற்றும் என தெரிவித்தார்.

சீன தூதரகத்தை  மூடுமாறு திடீரென உத்தரவு மிகவும் கண்டிக்கத்தக்கது, நாடுகடத்தப்படுவதற்கு ஒப்பானது என்று ஜின் கூறினார்.

அமெரிக்காவின் நடவடிக்கை இருதரப்பு உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு,  டிரம்ப் நிர்வாகம் ஆட்சியில் இருக்கும் போது, சீனா-அமெரிக்க உறவுகளை இயல்பாக்குவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று போல் தெரிகிறது, Xin Qiang கூறினார்.

Trending News