Bizarre! இளமையாக இருக்க தனது மகனின் ரத்தத்தை பயன்படுத்தும் வினோத நபர்!

இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதற்காக எந்த எல்லை வரைக்கும் செல்லக் கூடிய நபர்கள் சிலரே இருப்பர். அதில் ஒருவர் தான் பிரையன் ஜான்சன்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 13, 2023, 11:45 AM IST
  • சிறந்த தூக்கம் நாள் முழுவதும் புத்துணர்ச்சியூட்டும் சக்தி கொடுக்கிறது என்பதை உணர்ந்த பிரையன்.
  • ஜான்சனின் உணவுத் தேர்வுகளும் தனித்துவமானவை.
  • மகனின் ரத்தத்தை பயன்படுத்தும் பிரையன் ஜான்சன்.
Bizarre! இளமையாக இருக்க தனது மகனின் ரத்தத்தை பயன்படுத்தும் வினோத நபர்! title=

நியூயார்க்: நியூயார்க் நகரத்தின் பரபரப்பான தொழில் துறையில், கனவுகளும் லட்சியங்களும் நிறைந்த பிரையன் ஜான்சன், தொழில் வட்டாரங்களில் எதிரொலிக்கும் மிகவும் பிரபலமான பெயர். 45 வயதில், பிரையன் ஜான்சன் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைக்கும் நபர்.  இவர் மார்கண்டேயன் போல் என்றென்றும் இளமையாக இருக்க பலவிதமான முயற்சிகளையும் பழக்கங்களையும் கடைப்பிடிக்கிறார்.  அதில் சில வினோதமான பழக்கங்களும் அடங்கும். இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதற்காக எந்த எல்லை வரைக்கும் செல்லக் கூடிய நபர்கள் சிலரே இருப்பர். அதில் ஒருவர் தான் பிரையன் ஜான்சன்

தூக்கத்திற்கு முக்கியத்துவம்

பிரையன், இரவு 8:30 மணிக்கு உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.  பொதுவாக இரவு சீகிரம் உறங்கி, பின் சீக்கிரம் எழுவது சிறந்த பழக்கமாகவே கருதப்படுகிறது. சிறந்த தூக்கம் நால் முழுவதும் புத்துணர்ச்சியூட்டும் சக்தி கொடுக்கிறது என்பதை உணர்ந்த அவர் தனது தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கிறார்

தனித்துவமான டயட் 

ஜான்சனின் உணவுத் தேர்வுகளும் தனித்துவமானவை. அவரது தினசரி உட்கொள்ளல் 2,250 கலோரிகளைக் கொண்டுள்ளது, ஒரு நாளைக்கு 111 மாத்திரைகளை விழுங்குவது உட்பட, இவை அனைத்தும் காலை 6 மணி முதல் 11 மணி வரை குறுகிய நேரத்திற்குள் எடுத்துக் கொள்ளக் கூடியவை. விரத முறையை உள்ளடைக்கிய கட்டுப்பாடான உணவு முறை,  மூலம் அவர் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். ஜான்சனின் உணவு, அவரது மற்ற நடைமுறைகளைப் போலவே, வித்திசாமானது

ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையின் சக்தி

பிரையன் ஜான்சன் அறிவு மண்டலத்தை வலுப்படுத்த நான்கைந்து மணிநேரம் "ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை" என்பதை கடைபிடிக்கிறார். ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருக்கும் அவர், இந்த நேரத்தில், சிறிய பேச்சு மற்றும் அற்ப விஷயங்களின் கவனச்சிதறல்களிலிருந்து விடுபட்டு, ஆழ்ந்த யோசனைகளை ஆராய்வதற்கும் பிரமாண்டமான காட்சிகளை கற்பனை செய்வதற்கும் பயன்படுத்துக் கொள்ளகிறார். 

மாற்றத்திற்கான பயணம்

பிரையன் ஜான்சன் போராடி வெற்றி பெற்றுள்ள நிலையில், மனச்சோர்வுடன் போராடுவது முதல் 2020 இல் தற்கொலை எண்ணங்கள் கூட அவரை ஆட்கொண்டு சவால்களை எதிர் கொண்டார். தற்போதுள்ள புதிய பாதையை வடிவமைக்க அவர் என்றென்றும் இளமையாக இருக்க நினைத்தார்.

மேலும் படிக்க | திருமணத்தில் லட்சக்கணக்கில் கல்லாக்கட்டும் 'மணப்பெண் தோழி' - அது எப்படி?

மகனின் ரத்தத்தை பயன்படுத்தும் பிரையன் ஜான்சன் 

அவரது பல வழக்கத்திற்கு மாறான முயற்சிகளில், இரத்த பரிமாற்றம் தொடர்பாக அவர் மேற்கொண்ட முயற்சியாகும்.  ஜான்சன் தனது டீனேஜ் மகனின் இரத்தத்தை உடலி செலுத்தி பரிசோதனை செய்தார். இது அறிவியல் புனைகதைகளில் இருந்து வந்த ஒரு சிந்தனையாகத் தோன்றினாலும்,  முதுமையை தடுக்கும் வழக்கத்திற்கு மாறான வழிமுறைகளைக் கண்டறிவதில் அவரது ஈடுபாட்டை இது எடுத்துக்காட்டுகிறது. சோதனை பலனளிக்கவில்லை என்றாலும், நீண்ட ஆயுளுக்கான அவரது இடைவிடாத நாட்டத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

நிரந்தர இளமைக்கான இடைவிடாத நாட்டம்

பிரையன் ஜான்சனின் வாழ்க்கை சுவாரஸ்யமான ஒரு நாவலின் ஒரு அத்தியாயத்தைப் போல உள்ளது. தொழில்நுட்பத்தால் இயங்கும் உலகத்தின் பின்னணியில் வரையப்பட்ட நிரந்தர இளமைக்கான அவரது இடைவிடாத நாட்டம், விதிமுறைகளை சவால் செய்ய பயப்படாத ஒரு தொலைநோக்கு பார்வையாளரின் மனதில் ஒரு பார்வையை வழங்குகிறது. அவர் ஒழுக்கத்தையும் தனிமையையும் கோரும் ஒரு வாழ்க்கை முறையைப் பிடிக்கும்போது, புதுமை என்பது தொழில்நுட்பத்துடன் மட்டும் தான் நின்றுவிடவில்லை என்பதை நமக்கு நினைவூட்டுகிறார் - இது முதுமையின் எல்லைகளைக் கூட மாற்றியமைக்கக்கூடிய ஒரு சக்தியாகும்.

மேலும் படிக்க | Grey Divorce: ‘கிரே டிவோர்ஸ்” என்றால் என்ன? 50 வயசுக்கு மேல திருமண முறிவு அவசியமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News