9/11 தாக்குதலுக்கு முன்பாக ஒசாமாவை கொல்லும் திட்டத்தை சொதப்பிய அமெரிக்கா!

உலகை உலுக்கிய செப்டம்பர் 11, 2001 (9/11) தாக்குதலின் சூத்திரதாரியாகவும், அல்கொய்தாவின் மூளையாகவும் இருந்த ஒசாமா பின்லேடனை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 2, 2023, 03:41 PM IST
  • ஒசாமா பின்லேடனை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்தது.
  • அமெரிக்காவின் இந்தத் தேடுதல் 2 மே 2011 அன்று ஒசாமா கொல்லப்பட்டபோது முடிவுக்கு வந்தது.
  • பிரிட்டன் லேடனைக் கொல்லத் தயாராக இருந்தது இரகசிய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
9/11 தாக்குதலுக்கு முன்பாக ஒசாமாவை கொல்லும் திட்டத்தை சொதப்பிய அமெரிக்கா! title=

உலகை உலுக்கிய செப்டம்பர் 11, 2001 (9/11) தாக்குதலின் சூத்திரதாரியாகவும், அல்கொய்தாவின் மூளையாகவும் இருந்த ஒசாமா பின்லேடனை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக அமெரிக்கா தேடி வந்தது. அமெரிக்காவின் இந்தத் தேடுதல் 2 மே 2011 அன்று பாகிஸ்தானின் அபோதாபாத்தில், அமெரிக்க சிறப்பு நடவடிக்கைப் படையின் கைகளில் ஒசாமா கொல்லப்பட்டபோது முடிவுக்கு வந்தது. ஊடக அறிக்கையின்படி, 9/11 தாக்குதலுக்கு 9 மாதங்களுக்கு முன்பே பிரிட்டன் லேடனைக் கொல்லத் தயாராக இருந்ததாக இரகசிய ஆவணங்கள் மூலம் சமீபத்தில் தெரியவந்துள்ளது.

அல்கைதா தலைவரை கொல்லத் திட்டம்

முன்னாள் பிரதம மந்திரி டோனி பிளேயர் தலைமையிலான பிரிட்டிஷ் அரசாங்கம், அல்-கொய்தா தலைவரை வான்வழித் தாக்குதலில் கொல்லும் உத்தியை ஆதரித்ததாக புதிதாக வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன என்று தி டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

பின் லேடனின் பயங்கரவாத தாக்குதல்கள்

அந்த நேரத்தில், அல்-கொய்தாவின் தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து FBI இன் மோஸ்ட் வாண்டட் பயங்கரவாதிகள் பட்டியலில் பின்லேடன் இருந்தார். இந்த தாக்குதல்களில் கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது குண்டு வீசி 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க கடற்படை நாசகார கப்பலான யுஎஸ்எஸ் கோல் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் லேடனும் இருந்தார்.

டோனி பிளேயருக்கு அளித்த தகவல்

அமெரிக்க வெளியுறவு ஆலோசகர் ஜான் சோவர்ஸ் அப்போது பிளேயருக்கு அளித்த தகவலில்- 'நாங்கள் அனைவரும் ஒசாமா பின் லேடனை அழிப்பதற்கு ஆதரவாக இருக்கிறோம். எனினும் USS கோல் மீதான தாக்குதலுக்கு அவர் தான் காரணம் என்பதற்கான ஆதாரம் இன்னும் அமெரிக்கர்களிடம் இல்லை. எனவே உறுதியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை வான்வழித் தாக்குதலை நடத்த முடியாது. ஜனவரி 20க்குப் பிறகு (ஜார்ஜ் டபிள்யூ. புஷ் அதிபராக வரும்போது) அது நடக்காது' இதை அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் இரவு உணவுக்கு முன் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | நடுக்கடலில் இலங்கை தீவிர ரோந்து, ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

பிரிட்டன் தாக்குதல் முயற்சி தோல்வி

இருப்பினும், பில் கிளிண்டனின் உத்தரவின் பேரில், ஆகஸ்ட் 20, 1998 அன்று, ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான கோஸ்டில் உள்ள அல்கொய்தா தளங்கள் மீது அமெரிக்கா டொமாஹாக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதால், லேடனைக் கொல்லும் பிரிட்டனின் வியூகம் வெற்றிபெறவில்லை. பிரிட்டனுக்கு முன் அமெரிக்கா லேடனைக் கொல்ல விரும்பியது ஆனால் அது நடக்கவில்லை. இந்தத் தாக்குதலில் பின்லேடன் உயிர் தப்பினார். பிரிட்டன் அவர் ஒளொந்திருந்த இடத்தை கண்டுபிடித்திருந்த நிலையில், அந்த மறைவிடத்திற்கு அவர் மீண்டும் வரவில்லை.

மேலும் படிக்க | 9ம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு: 2023 ஜனவரி 6 & 7 தேதிகளில் சென்னையில்!

மேலும் படிக்க | நலிவடைந்த நிலையில் மண் பாண்ட தொழிலாளர்கள்! அரசிடம் வைத்துள்ள கோரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News