Work From Home மூலமா வேலையா... பாத்து சூதானமா இருங்க - இனி அபராதம்தான்?

Work From Home: தற்போதெல்லாம் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது அதிகமாகிவிட்ட நிலையில், நிறுவனங்கள் உங்களை கண்காணித்து வருகிறது என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jan 14, 2023, 06:06 PM IST
  • பணியாளர்களின் அதிக ஓய்வு நேரத்தால் உற்பத்தி குறைவதாக தகவல்.
  • இதனை தடுக்க நிறுவனங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Work From Home மூலமா வேலையா... பாத்து சூதானமா இருங்க - இனி அபராதம்தான்? title=

Work From Home: தற்போது பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்த வழக்கம் கொரோனா தொற்று காலத்தில் தொடங்கினாலும், தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

பணியாளர்கள் தங்கள் ஆறுதல் வெளியே வேலை செய்ய அனுமதிப்பது மட்டுமின்றி, அலுவலகத்திற்கான பயண நேர விரயத்தைத் தடுக்கிறது. இருப்பினும், வீடுகளில் இருந்தே பணிபுரிவது (Work From Home) சில குறைபாடுகளையும் கொண்டுள்ளது. 

சில நிறுவனத்தில் முன்பு வந்த உற்பத்தியே, தற்போதும் வருகின்றன. ஆனால், பல நிறுவனங்களில் தற்போது உற்பத்தி குறைந்துள்ளது, காரணம் பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பாம்பின் விஷம் அதை ஒன்றும் செய்யாதா? சில சுவாரசிய தகவல்கள்

உற்பத்தியை பெருக்கவும், வீட்டில் இருந்து பணிபுரியும் வாய்ப்பை பணியாளர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் சில புத்திசாலித்தனமான வழிகளைக் நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. சமீபத்தில், வீட்டில் இருந்துத வேலை செய்த நேரத்தை வீணடித்ததற்காக ஒரு பெண் பணியாளர், அவர் பணியாற்றும் நிறுவனத்திற்கு சுமார் 3 லட்ச ரூபாயை அபராதமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கார்லீ பெஸ்ஸே என்ற பெண் கணக்காளராகப் பணிபுரிந்தார். தற்போது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தனது முன்னாள் முதலாளி எந்த காரணமும் இல்லாமல் தன்னை பணிநீக்கம் செய்ததாகக் கார்லீ கூறினார். மேலும், ரூ. 3.03 லட்சம் (5,000 கனடிய டாலர்கள்) என கொடுக்கப்படாத ஊதியத்தை தனக்கு வழங்குமாறு நிறுவனத்திடம் கேட்டுள்ளார். 

அப்போது அவருக்கு ஆச்சரியமளிக்கும் வகையில், அந்த பெண் வேலை நேரத்தை முறைகேடாக பதிவு செய்ததை  முதலாளி அம்பலப்படுத்தினார். அந்த பெண் 50 மணி நேர வேலை நேரத்தை பதிவு செய்திருந்தாலும், அதையெல்லாம் அவர் வேலைக்காக செலவிடவில்லை என்று நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், பணியாளரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க டைம்கேம்ப் என்ற மென்பொருள் அமைக்கப்பட்டதாக முதலாளி கூறினார். 

மென்பொருள் பதிவு செய்த நேரமும், அந்த பெண்ணின் அட்டவணைகளுடன் பொருந்தவில்லை என்று நிறுவனம் கூறியது. நிறுவனத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து, பெஸ்ஸே தனது பணிக்கும் தனிப்பட்ட நேரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மென்பொருள் அங்கீகரிக்கவில்லை என்று கூறினார். அவர் வேலை செய்ய கடினமான நகலை பயன்படுத்தினார் என்று கூறினார். 

ஆனால் நிறுவனம் மென்பொருளின் செயல்திறனை நிரூபித்த பிறகு பெஸ்ஸின் கூற்றுக்கள் நிறுவனத்தால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து, அந்த பெண் தனது முதலாளிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | நல்ல செய்தி...! இனி சாதாரண டிக்கெட்டில் ரிசர்வேஷன் பெட்டிகளில் செல்லலாம்...!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News