ஆஸ்திரிய எரிவாயு குழாய் மையம் வெடிப்பு, 18 பேர் படுகாயம்!

இச்சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், 18 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Last Updated : Dec 12, 2017, 03:50 PM IST
ஆஸ்திரிய எரிவாயு குழாய் மையம் வெடிப்பு, 18 பேர் படுகாயம்! title=

ஆஸ்திரியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய எரிவாயு குழாய் ஒன்று வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார், மேலும் 18 பேர் காயமடைந்தனர். 

ஆஸ்திரியாவின் மிகப்பெரிய வரவேற்பு மையமான பாம்கர்ட்டன் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரஷ்யா, நோர்வே மற்றும் பிற இடங்களிலிருந்து எரிவாயு இறக்குமதிகளுக்கான முக்கிய விநியோக மையமான வியன்னாவில் உள்ள பாம்கர்ட்டன் கிழக்கு பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று (செவ்வாய்) காலை சுமார் 8:45 (0745 GMT) மணியளவில் இச்சம்பவம் நிகழ்த்துள்ளது. விசயம் அறிந்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும் அச்சமயத்தில் தீயினை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

பின்னர் நீண்ட நேர் முயற்சிக்குப் பின்னர் தற்போது நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என அதிகாரி தெரிவித்துள்ளனர்.

எனினும் இச்சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், 18 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பாம்கர்ட்டன் வாயு மையம் ஆண்டுதோறும் 40 பில்லியன் கனமீட்டர் எரிவாயுவை கொள்முதல் செய்கிறது. ஐரோப்பாவிலும், வடக்கு இத்தாலியாவிலும் இங்கிருந்து எரிவாயுக்கள் விநியோகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News