Pakistan: லாகூரின் பரபரப்பான சந்தையில் குண்டுவெடிப்பு; 3 பேர் பலி, 20 பேர் காயம்

இந்தியப் பொருட்கள் விற்கப்படும் லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் உள்ள பான் மண்டியில்,குண்டு வெடித்ததில் அருகில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் ஜன்னல்கள் வெடித்து சிதறின.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 20, 2022, 05:35 PM IST
  • இந்த குண்டு வெடிப்பிற்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.
  • குண்டு வெடிப்பில் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன.
  • அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
Pakistan: லாகூரின் பரபரப்பான சந்தையில் குண்டுவெடிப்பு; 3 பேர் பலி, 20 பேர் காயம் title=

Lahore Bomb Blast: பாகிஸ்தானின் லாகூரில் பரபரப்பான ஷாப்பிங் மார்க்கெட்டில் வியாழக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்; 20 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். மோட்டார் பைக்கில் இருந்த நேரத்தைக் கட்டுப்படுத்தும் சாதனம் தான் குண்டு வெடிப்புக்குக் காரணம் என்று ஆரம்ப விசாரணைகள் கூறுவதாக லாகூர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ராணா ஆரிஃப் செய்தி நிறுவனமான AFP நிறுவனதிடம் தெரிவித்தார்.

இந்தியப் பொருட்கள் விற்கப்படும் லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் உள்ள பான் மண்டியில்,குண்டு வெடித்ததில் அருகில் உள்ள கடைகள் மற்றும் கட்டிடங்களின் ஜன்னல்கள் வெடித்து சிதறின.

இந்த குண்டு வெடிப்பிற்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை, ஆனால் அரசாங்கத்திற்கும் பாகிஸ்தானின் தலிபான்களுக்கும் (Taliban Terror Outfit) இடையேயான ஒரு போர் நிறுத்த உடன்பாடு, டிசம்பரில் முடிவுக்கு வந்தததை அடுத்து காவல்துறைக்கு எதிராக தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு நிகழ்வுகளும் தாக்குதல்களும் நடந்து வருகின்றன.

தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP)  என்ற ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் நெருக்கமான பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு குண்டு வெடிப்பு சம்பவங்களில் பெரும்பாலானவற்றிற்கு பொறுப்பேற்றுள்ளது.

ALSO READ | அமெரிக்காவில் 5G: ஏர் இந்தியா சர்வதேச விமானங்கள் ரத்துக்கான காரணம் என்ன..!!!

"வெடிப்பின் தன்மையை  ஆராய்ந்து வருகிறோம். குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்று துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் போலீஸ் ஆபரேஷன் டாக்டர் முகமது அபித் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறினார்.

தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்பின் தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் மாயோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர், அங்கு சிகிச்சை பலனின்றி இருவர் இறந்து விட்டனர்.

ஒரு சிறுவன் உட்பட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மாயோ மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் இப்திகார் தெரிவித்தார். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் கூறினார்.

குண்டு வெடிப்பில் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன. மேலும் அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். குண்டுவெடிப்பை அடுத்து அனார்கலி பஜார் முழுவதும் மூடப்பட்டது.

ALSO READ | Las Luminarias: ஸ்பானிஷ் திருவிழாவில் ‘தீ’ குளிக்கும் குதிரைகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News