5,000 ஆண்டுகள் பழமையான ஹோட்டலை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!

கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு உணவகத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபித்துள்ளனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 18, 2023, 05:22 PM IST
  • நவீன கால பிரிட்ஜுடன் ஒப்பிடும் வகையிலான, 5,000 ஆண்டுகள் பழமையான ஈரப்பதம் கொண்ட அமைப்பு கண்பிடிக்கப்பட்டது.
  • 'உணவை குளிர்ச்சியாக வைத்திருக்க இது பயன்படுத்தப்பட்டதாக அகழ்வாராச்சியினர் கூறினர்.
  • மீனின் எச்சங்கள் அடங்கிய கூம்பு வடிவ கிண்ணங்களையும் அகழ்வாராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது.
5,000 ஆண்டுகள் பழமையான ஹோட்டலை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்! title=

கிட்டத்தட்ட 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு உணவகத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு உலகின் முதல் நகரங்களில் அன்றாட வாழ்க்கை குறித்து அறிய பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், பண்டைய ஈராக்கின் சுமேரிய நாகரிகத்தின் ஆரம்பகால நகர்ப்புற மையங்களில் ஒன்றாக அறியப்பட்ட சமகால நகரமான நசிரியாவின் வடகிழக்கில், பண்டைய லகாஷ் இடிபாடுகளில் ஒரு அமெரிக்க-இத்தாலிய குழு ஆராய்ச்சி நடத்தியது . தற்போது அல்-ஹிபா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகரம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியுள்ளது. கடந்த காலத்தில், பல வரலாற்று கண்டுபிடிப்புகள் இங்கு செய்யப்பட்டுள்ளன.

கண்டுபிடிப்பு

அகழ்வாராய்ச்சியைத் தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள் உணவு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு திறந்த முற்றத்தைக் கண்டுபிடித்தனர். அதனுடன் பெஞ்சுகள், ஒரு அடுப்பு, பண்டைய உணவு நினைவுச் சின்னங்கள் மற்றும் நவீன கால பிரிட்ஜுடன் ஒப்பிடும் வகையிலான,  5,000 ஆண்டுகள் பழமையான ஈரப்பதம் கொண்ட அமைப்பு கண்பிடிக்கப்பட்டது.  'உணவை குளிர்ச்சியாக வைத்திருக்க இது பயன்படுத்தப்பட்டதாக அகழ்வாராச்சியினர் கூறினர். மீனின் எச்சங்கள் அடங்கிய கூம்பு வடிவ கிண்ணங்களையும் அகழ்வாராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது.

மேலும் படிக்க | Egyptian Mummy: மம்மியின் வயிற்றில் சிதையாத ‘கரு’; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!

மேலும் அந்த இடத்தில்  பரிமாற பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான  பாத்திரங்கள், மக்கள் அமரும் பெஞ்சுகள் ஆகியவையும் உள்ளது. மேலும், குளிர்சாதன பெட்டியின் பின்னால் ஒரு அடுப்பு உள்ளது. இது உணவு சமைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் என கழ்வாராய்ச்சியினர் கூறுகின்றனர்.  மேலும் இது, மக்கள் சாப்பிட வரக்கூடிய இடம் என்றும் அது வீடு இல்லை எனவும் கூறிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பீர் குடிப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்தனர். "சுமேரியர்களுக்கு பீர் மிகவும் பொதுவான பானமாகும், தண்ணீரை விடவும் அதிகமாக இருப்பதால், நாங்அகழ்வாராய்சிக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார், 

அப்பகுதியில் தோண்டப்பட்ட கோயில்களில் ஒன்றில், பீர் செய்முறை கண்டுபிடிக்கப்பட்டது. பென் அருங்காட்சியகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் பாக்தாத்தில் உள்ள பழங்கால மற்றும் பாரம்பரிய மாநில வாரியம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டில் அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. அங்கு அவர்கள் புதிய நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். தரவு மற்றும் தகவல்களைப் பாதுகாப்பதற்கான ட்ரோன் புகைப்படம் மற்றும் மரபணு பகுப்பாய்வு ஆகிய தொழிநுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | எகிப்தின் 4300 ஆண்டு பழமையான தங்க மூலாம் பூசப்பட்ட மம்மி கண்டுபிடிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News