ஒருவரது கணக்கிற்கு யாராவது தவறுதலாக ஒரு பெரும் தொகையை அனுப்பினால் என்ன நடக்கும்? அது சம்பந்தப்பட்ட நபர்களை பொறுத்தது எனலாம். ஒன்று பணத்தை அவர்களே திருப்பி அனுப்பி விடுவார்கள். இல்லை என்றால், சட்ட பூர்வமாக திரும்ப பெற முடியும். இது இரண்டு வாய்ப்பும் இல்லாமல், தாலிபானின் பணம் தற்போது தஜகிஸ்தானிடம் சிக்கிக் கொண்டதால், இப்போது திரும்பிக் கொடுங்கள் என கொஞ்சி கேட்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது தாலிபான். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தாலிபான், தஜகிஸ்தான் இப்போது கை விரித்து விட்டதால், பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது.
தஜகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வங்கிக் கணக்கில் தாலிபான்கள் தவறுதலாக பணத்தை அனுப்பியதால், என்ன செய்வது என அறியாமல் தாலிபான் (Taliban) அமைப்பு தவிக்கிறது. பணத்தை திரும்ப அனுப்புங்கள் என தாலிபான் கோரி வருகிறது.
இருப்பினும், தலிபான்களை பயங்கரவாத அமைப்பாக தஜகிஸ்தான் கருதும் நிலையில், அரசு அதிகாரிகள், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறு ஏதும் இல்லை என மறுத்துள்ளனர்.
ALSO READ | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: மகனின் ‘₹3000 கோடியை’ குப்பையில் வீசிய தாய்..!!
தஜிகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வங்கிக் கணக்கில் தலிபான்கள் கிட்டத்தட்ட $800,000 பணத்தை அனுப்பியதாக சில நாட்களுக்கு முன்பு தஜகிஸ்தானில் உள்ள Avesta செய்தி இணையதளம் தெரிவித்தது.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் அரசாங்கம், தஜிகிஸ்தானில் உள்ள அகதிக் குழந்தைகளுக்கான பள்ளிக்கு நிதியளிக்க இருந்தது என்றும், ஆனால் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் (Afghanistan) கைப்பற்றிய பிறகு, அதிபர் கானி நாட்டை விட்டு ஓடியதால் ஒப்பந்தம் முறிந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாலிபான் ஆப்கானை கைப்பற்றிய சில வாரங்களுக்குப் பிறகு, பணப் பரிமாற்றம் செப்டம்பரில் நடந்ததாகவும், ஆனால் அதில் $400,000 என்ற அளவில் தான் பண பரிமாற்றம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
பொருளாதார நிலைமை மோசமாக இருப்பதாலும், கடும் நிதி நெருக்கடி நிலவுவதாலும், நவம்பரில், தஜிகிஸ்தான் அரசாங்கத்தை தலிபான்கள் தொடர்பு கொண்டு, பண பரிமாற்றம் குறித்து தெரித்து, அதனை திருப்பித் தருமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். இருப்பினும், தஜிகிஸ்தான் அதிகாரிகள் பணத்தை திரும்ப அளிக்க முடியாது என மறுத்துவிட்டனர்.
"நாங்கள் அந்த பணத்தில் பள்ளியை கட்டவில்லை தான்; ஆனால், நான்கு மாதங்களாக, ஆசிரியர்கள் மற்றும் தூதரக ஊழியர்கள் இந்த நிதியில் இருந்து தான் சம்பளம் பெறுகிறார்கள். அனைத்து பணமும் ஆப்கான் தூதரகம் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்களின் தேவைகளுக்காக செலவிடப்படுகிறது," என கூறி கை விரித்து விட்டது.
ALSO READ | Viral Video: இது ‘சைவ’ பூனை; மீனை பார்த்தாலே வாந்தி எடுக்கும் பூனை..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
தஜிகிஸ்தான் அரசாங்கம் தலிபானை ஒரு பயங்கரவாத அமைப்பாகவே கருதுகிறது, எனவே, 'பயங்கரவாத அமைப்பு' என்று முத்திரை குத்தப்பட்ட அமைப்புக்கு, தங்கள் அரசு பணம் அனுப்புவது சாத்தியமில்லை என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.