சூடானில் தற்போது ஆட்சி கவிழ்ப்பு, உள்நாட்டு போர் போன்ற சூழல் நிலவுகிறது. நாடு முழுவதும் வன்முறையில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர 183 பேர் காயமடைந்துள்ளனர். சூடானின் மத்திய மருத்துவக் குழு இதனை உறுதி செய்துள்ளது. சூடானில் உள்ள துணை ராணுவப் படையின் தலைவரான முகமது டகாலோ, தனது ஆயுதக் குழுவிற்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே சனிக்கிழமை மோதல் வெடித்ததாகக் கூறினார். இதற்குப் பிறகு, தலைநகர் கார்ட்டூமில் உள்ள பெரும்பாலான அதிகாரப்பூர்வ தளங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. டாக்லோ, 'கார்டோமில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான மூலோபாய தளங்களை துணை ராணுவ படை கட்டுப்படுத்துகிறது' என்று கூறினார்.
மறுபுறம், நாட்டின் இராணுவத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான், டக்லாவின் கூற்றை மறுத்துள்ளார். அரசாங்கத் தளங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருப்பதாக அவர் கூறினார். சனிக்கிழமை நடந்த வன்முறையில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அதிபர் மாளிகை மற்றும் தலைநகரின் இராணுவ தலைமையகம் உட்பட கார்டூம் முழுவதும் ஆயுத மோதல்கள் பதிவாகியுள்ளன. கடந்த சில மணிநேரங்களில் காயமடைந்த பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் டஜன் கணக்கானவர்கள் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். சூடானின் இராணுவம் கார்ட்டூம் விமான நிலையத்திற்குள் ஊடுருவிய விரைவு ஆதரவுப் படை ஒரு சிவிலியன் விமானத்திற்கு தீ வைத்ததாகக் கூறியது.
இராணுவத்தின் மீது தாக்குதல்
'விரைவு ஆதரவுப் படை' (RSF) எனப்படும் துணை ராணுவப் படைக்கும் ராணுவத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பதற்றம் அதிகரித்துள்ளதால், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசியல் கட்சிகளுக்கு இடையே சர்வதேச அளவில் ஆதரவான ஒப்பந்தம் கையெழுத்திடுவது தாமதமாகி வருகிறது. சனிக்கிழமை காலை வெளியிடப்பட்ட அறிக்கையில், தெற்கு கார்ட்டூமில் உள்ள படைத் தளத்தை இராணுவம் தாக்கியதாக RSF குற்றம் சாட்டியது. நகரின் விமான நிலையம் மற்றும் நாட்டின் அதிபர் மாளிகையின் "முழுக் கட்டுப்பாட்டை" இராணுவம் கைப்பற்றியதாக அந்த அறிக்கை கூறுகிறது.
விமான சேதம்
கார்ட்டூமுக்கு வடமேற்கே 350 கிமீ தொலைவில் உள்ள மெரோவில் உள்ள ஒரு விமான நிலையம் மற்றும் இராணுவ தளத்தை கைப்பற்றியதாகவும் RSF கூறியுள்ளது. இருப்பினும், தலைநகரின் தெற்குப் பகுதியில் இராணுவப் படைகளைத் தாக்க RSF வீரர்கள் முயன்றபோது மோதல் தொடங்கியதாக சூடான் இராணுவம் கூறியது. கார்ட்டூமில் உள்ள மூலோபாய இடங்களை RSF கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பதாகவும் இராணுவம் குற்றம் சாட்டியது. இராணுவம் RSF ஐ "கிளர்ச்சி படை" என்று அறிவித்தது மற்றும் துணை ராணுவத்தின் அறிக்கைகளை "பொய்கள்" என்று விவரித்தது.
போர் விமானங்கள் ஒரு இராணுவ தளத்திலிருந்து புறப்பட்டு கார்டூம் மற்றும் அதைச் சுற்றியுள்ள RSF நிலைகளைத் தாக்கியதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சவூதி அரேபியாவின் தேசிய விமான நிறுவனம், அதன் ஏர்பஸ் ஏ330 விமானம் ஒன்று "விபத்தில்" சிக்கியதை அடுத்து, அனைத்து விமானங்களையும் நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவுறுத்தல்
இதற்கு மத்தியில், சூடானில் உள்ள இந்திய தூதரகம் அதன் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும், வெளியில் செல்வதை தவிர்க்கவும் எனவும் கேட்டுக் கொண்டது.
மேலும் படிக்க | பாவங்களை போக்கி அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் தாய்லாந்து சோங்க்ரான் நீர் திருவிழா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ