ஜப்பானிய சொகுசு கப்பலில் 88 பேருக்கு புதிய வைரஸ் பாதிப்பு உள்ளது இன்று கண்டறியப்பட்டது.
சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு வெளியேயும் வேகமாக பரவி வருகிறது. சீனா மற்றும் வெளிநாடுகள் என 69 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. கடைசியாக வெளியான தகவல்படி 1,800 பேர் இந்த வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சீனா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக போராடி வருகின்றன.
இதற்கிடையில் ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பலில் 88 பேருக்கு புதிய வைரஸ் பாதிப்பு உள்ளது இன்று கண்டறியப்பட்டது.
சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். இதில் 132 பேர் கப்பல் ஊழியர்கள் ஆவர். இந்நிலையில், அவர்களில் 6 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 681 பேரிடம் நடந்த பரிசோதனை முடிவுகளில் இருந்து 88 பேருக்கு புதிய வைரஸ் பாதிப்பு உள்ளது இன்று கண்டறியப்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 542 ஆக உயர்ந்துள்ளது.