கொரியன் சீரிஸ் பார்த்ததால் கொடூரம்... 2 சிறுவர்களுக்கு தூக்கு தண்டனை!

தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்களைப் பார்த்ததற்காக இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வட கொரியா மரண தண்டனையை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Dec 6, 2022, 08:28 PM IST
  • பொதுமக்கள் முன்னிலையில் சிறுவர்களுக்கு தூக்கு தண்டனை.
  • வட கொரியாவில் தென் கொரிய படங்களை பார்க்க தடை
கொரியன் சீரிஸ் பார்த்ததால் கொடூரம்... 2 சிறுவர்களுக்கு தூக்கு தண்டனை! title=

K-Drama series என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப் பார்ப்பது அல்லது விநியோகிப்பது வட கொரியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் சேர்ந்து, வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் பல தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்கள், வெப்சீரிஸ்களை பார்த்ததாக கூறப்படுகிறது. 

அவர்களை அதே நகரத்தில் உள்ள ஒரு விமானநிலையத்தில் உள்ளூர்வாசிகள் முன்னிலையில் அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அக்டோபரில் நடந்ததாக கூறப்படும் நிலையில், ஆனால் இந்த கொலைகள் பற்றிய தகவல்கள் கடந்த வாரம்தான் வெளிவந்தன.

மேலும் படிக்க | 4 மாசமா குளிக்கல... கப்பு தாங்கல - அறை தோழியை விரட்டியத்த பெண்!

இரண்டு சிறுவர்களும் தடையை மீறி திரைப்படங்களை பார்த்த குற்றத்திற்காக இந்த தண்டனை கொடுக்கப்பட்டதாகவும், இதன் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அனைவரின் முன்னிலையில் தண்டனை கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

கடந்தாண்டு, அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை, கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தை முன்னிட்டு 11 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என வடகொரியா அறிவித்திருந்தது. அந்த காலகட்டத்தில், குடிமக்கள் சிரிக்கவோ, ஷாப்பிங் செய்யவோ அல்லது மது அருந்தவோ அனுமதிக்கப்படவில்லை. 2020இல், வட கொரியா நாட்டில் பிரபலமாகி வரும் கொரிய நிகழ்ச்சிகளை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு அதனை தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மாந்தரீகர் கட்டுபாட்டில் புடின்; மான் இரத்தத்தில் குளியில்... ரஷ்ய பத்திரிகையாளரின் பகீர் தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News