ஈரான் தலைநகரம் தெஹ்ரான் மருத்துவமனையில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் 19 பேர் பலி

வடக்கு தெஹ்ரானில் (Tehran) உள்ள ஒரு மருத்துவ கிளினிக்கில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியானதாக தகவல்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2020, 07:59 AM IST
ஈரான் தலைநகரம் தெஹ்ரான் மருத்துவமனையில் ஏற்பட்ட எரிவாயு கசிவால் 19 பேர் பலி title=

தெஹ்ரான்: வடக்கு தெஹ்ரானில் (Tehran) உள்ள ஒரு மருத்துவ கிளினிக்கில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் ஏற்பட்ட வெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் 13 பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர், ஆனால் தெஹ்ரான் (Tehran Fire) தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஜலால் மாலேகி பின்னர் மாநில தொலைக்காட்சிக்கு இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

இறந்தவர்களில் 15 பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் இருக்கலாம் என அரசு நடத்தும் ஐஆர்என்ஏ (IRNA News) செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் 20 பேரை மீட்டதாக மாலேகி மேலும் கூறினார்.

ஆன்லைனில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், மேல்நோக்கி செல்லும் தீப்பிழம்புகளிலிருந்து கருப்பு புகை எழுவதைக் காட்டியது.

பிற செய்தி வாசிக்க | ஈராக்கில் அமெரிக்கத் தூதரகம் அருகே 3 ராக்கெட்டுகள் மோதி தாக்குதல்!!

பிற செய்தி வாசிக்க | "ஈரானின் உச்ச தலைவர்கள்" நிதானமாக பேசுங்கள் -எச்சரித்த டொனால்ட் டிரம்ப்

தெஹ்ரான் கவர்னரின் துணை ஆளுநர் ஹமீத்ரேசா கவுடர்ஸி, மாநில டிவியிடம், கட்டிடத்தில் உள்ள மருத்துவ எரிவாயு தொட்டிகளில் கசிவு ஏற்பட்டதே வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கு காரணம் என்று கூறினார்.

மருத்துவ மையத்தில் ஏராளமான ஆக்ஸிஜன் தொட்டிகள் இருப்பதால், அதிக வெடிப்புகள் ஏற்படக்கூடும் என்று மாநில தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

தெஹ்ரானின் ஆம்புலன்ஸ் சேவையின் தலைவர் பேமன் சபாரியன் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்திற்கு இந்த தகவலை கொடுத்தார். இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக ஸ்பீரியன் தெரிவித்தார். தெஹ்ரான் துணை ஆளுநர் ஹமீத் ராசா கவுடெர்ஜி மாநில தொலைக்காட்சியில் எரிவாயு கசிவு தான் வெடிப்பிற்கு காரணமாக அமைந்தது என்று கூறினார். 

Trending News