கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியும், காங். தலைவர் ராகுலும் ஏற்கனவே தங்கள் பிரசாரத்தை துவக்கி விட்டனர். இருவரும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
எனவே, ஆளும் காங்., பா.ஜ. இடையே கடும் போட்டி நிலவுகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்றோக வந்தாலும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி கார்நாடகா மாநிலத்தின் ஒரு பகுதியான குல்பர்காவில் இன்று தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தினை துவங்கியுள்ளார்!
பிரசார கூட்டத்தில் அவர் பேசுகையில்...!
ஏழைகளின் வாழ்கையை பற்றி கவலை கொள்ளத காங்கிரஸ் பொய் வாக்குறுதிகளை நம்முடைய மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றது. எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
கர்நாடகாவில் விவசாயிகளுக்கு நல்ல காலத்தை பா.ஜ., அரசு கொண்டு வரும். பெண்கள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் நலன் பா.ஜ. தொடர்புடையது.
வெப்பம் தாங்கும் மக்கள் காங்கிரஸ் தரும் இன்னல்களை பொருத்து கொள்ளவில்லை. இதன் மூலம், 4 வருடங்களில் ஒவ்வொரு மாநிலமாக காங்கிரஸ் இழந்து வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விவசாயிகளுக்கு செய்து வரும் நலத்திட்டங்களை பார்த்து மாநில அரசு பயந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
WATCH: PM Narendra Modi speaking at a rally in Kalaburagi(Karnataka) https://t.co/Cp71NUnT5J
— ANI (@ANI) May 3, 2018