உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தாசம், சாருக் ஆகியோர் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அடுத்த வரதராஜபுரத்தில் தங்கியிருந்து டிவி, கேஸ்அடுப்பு உள்ளிட்டப் பொருட்களை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
அவர்களை பிடித்து விசாரித்த காவலர்கள் அவர்களது வீட்டிற்குச் சென்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 டிவிக்கள், கேஸ் அடுப்பு, 47 ஆயிரம் பணம் ஆகியவற்றை எடுத்து அங்கிருந்து தப்பியுள்ளனர். காவல் துறையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.