சேலம் மாநகராட்சி செவ்வாப்பேட்டை 30 வது வார்டு அய்யாசாமி தெரு உள்ளது. இப்பகுதியின் கவுன்சிலர் திமுக கட்சியை சேர்ந்த அம்சா. கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடிநீர் செல்லும் குழாயில் பழுத்தாகியுள்ளது. இதுகுறித்து திமுக பெண் கவுன்சிலர் அம்சா சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடிநீர் செல்லும் குழாயை விரைந்து சீர்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
பிளம்பருக்கான கூலியை கவுன்சிலர் கொடுப்பதாகவும், பைப் வாங்கிய செலவை வீட்டின் உரிமையாளர் ஏற்றுக்கொள்ளுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு வீட்டில் உரிமையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் திமுக பெண் கவுன்சிலர் மற்றும் வீட்டின் உரிமையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.