"வீரே தி வெட்டிங்" படத்திற்கு பாகிஸ்தானில் தடை!!

பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருந்த "வீரே தி வெட்டிங்" படத்திற்கு பாகிஸ்தானில் திரையிட தடை செய்யப்பட்டுள்ளது! 

Last Updated : May 31, 2018, 03:40 PM IST
"வீரே தி வெட்டிங்" படத்திற்கு பாகிஸ்தானில் தடை!! title=

பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருந்த "வீரே தி வெட்டிங்" படத்திற்கு பாகிஸ்தானில் திரையிட தடை செய்யப்பட்டுள்ளது! 

இயக்குநர் ஷஷங் கோஷ் இயக்கத்தில் கரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், ஷிகா தல்சானியா ஆகியோர் நடித்திருக்கும் படம் "வீரே தி வெட்டிங்". கரீனா கபூர், சோனம் கபூர் முன்னணி ரோலில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரேகா கபூர் தயாரிக்கிறார். இப்படம் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டடு என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு தோழிகளை மையப்படுத்திய காமெடி படமாக உருவாக்கி வருகிறது "வீரே தி வெட்டிங்". படத்தின் ட்ரையிலர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது. இப்படம் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி (நாளை) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இப்படம் நாளை வெளியாகும் நிலையில், பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருந்த "வீரே தி வெட்டிங்" படத்திற்கு பாகிஸ்தானில் திரையிட தடை செய்யப்பட்டுள்ளது.

 

Trending News