மகாபாரத காலத்திலேயே இணையதள வசதி இருந்தது என்று கூறிய நாள் முதல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் குமார் பதிவிட்டு வந்தார்.
படித்த இளைஞர்கள், அரசு வேலை கேட்டு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லாமல் பீடா கடை வைக்கலாம் என்றார்.
அதையடுத்து, இந்தியாவைச் சேர்ந்த டயானா ஹைடனுக்கு உலக அழகிப் பட்டம் 1997-ல் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது. என்ற கேள்வி கேட்டு அனைவரையும் அதிர்ச்சிகுள்ளாக்கினார்.
இதையடுத்து, இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நாளை டெல்லி வந்து மோடியையும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும் சந்திக்கும்படி திரிபுரா முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், பிப்லாப் தேவ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் அவர் கூறும்போது...!
என் அரசின் செயல்பாடுகளில் யாரேனும் தலையிட்டாலோ அல்லது விமர்சனம் செய்தாலோ அவர்களின் விரலை இழுத்து வைத்து நகத்தை வெட்டி விடுவேன்.
என் அரசை யாரும் தொட்டுப் பார்க்கக் கூட கூடாது என்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
#WATCH Tripura CM Biplab Kumar Deb says, "Mere sarkaar mein aisa nahin hona chahiye ki koi bhi usme ungli maar de, nakhoon laga de. Jinhone nakhoon lagaya, uska nakhoon kaat lena chahiye" pic.twitter.com/bht51upsmX
— ANI (@ANI) May 1, 2018