சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டாகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது
பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் எதிராக அமெரிக்கா படைகள் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
சிரியாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஹமா மாகாணத்தில் அமைந்திருக்கும் 2 கிராமங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீரென்று
கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 52 பேர் கொல்லப்பட்டனர்.தாக்குதல் நடத்த பட்ட இரண்டு கிராமங்களிலும் 15 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் இறந்துள்ளனர். மேலும் 27 அரசு ஆதரவு படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.
இதில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த 10 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டாகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது.
இந்தப் போரின்போது சிரிய அதிபருக்கு ஆதரவான படைகள் ரசாயன ஆயுத தாக்குதலில் அவ்வப்போது ஈடுபடுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகிறது. உள்நாட்டு எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றன. இதை சிரியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டாகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்லிப் மாகாணம், கான் ஷேக்குன் நகரில் போர் விமானங்கள் மூலம் விஷ வாயு தாக்குதல் நடத்தின. இந்த விஷ வாயு தாக்குதலில் மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி வருகின்றனர். இதுவரை குழந்தைகள் உள்பட கிட்டத்தட்ட100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிரியாவில் அதிபராக உள்ள பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 7 ஆண்டாகளாக உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை குறைந்தது 3¼ லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் போரின்போது சிரிய அதிபருக்கு ஆதரவான படைகள் ரசாயன ஆயுத தாக்குதலில் அவ்வப்போது ஈடுபடுவதாக சர்வதேச அளவில் குற்றம் சாட்டப்படுகிறது. உள்நாட்டு எதிர்க்கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை கூறுகின்றன.
சிரியாவில் நீதிமன்ற வளாகத்தில் ற்கொலை படை தாக்குதலில் 25 பேர் பலி.
சிரியாவில் ஹமிடியே மாவட்டத்தில் உள்ள டமாஸ்கஸ் நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைய முயன்ற தற்கொலை படை பயங்கரவாதியை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்திய போது தான் வைத்து இருந்த குண்டை பயங்கரவாதி வெடிக்க செய்துள்ளார். இந்த தாக்குதலில் 25 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாதமும் பொறுப்பேற்கவில்லை.
சிரியாவில் கடந்த 5 நாட்களில் நடந்த 2 வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா நாட்டில் முகாமிட்டுள்ள துருக்கி படையினரின் முகாம் மீது ரஷ்யா தவறுதலாக நடத்திய தாக்குதலில், 3 பேர் பலியாகினர்.
அந்நாட்டின் அல் பாப் பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை அங்கிருந்து விரட்டும் நோக்கில், துருக்கி மற்றும் அமெரிக்கப் படைகள் ஒருபுறமும், ரஷ்யா, சிரியா படைகள் மறுபுறமும் தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள துருக்கி படையினரின் முகாமை, ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம் என, ரஷ்யா தவறுதலாக நினைத்து, திடீரென போர் விமானம் மூலமாகக் குண்டுகள் வீசி, தாக்கியது. இதில், 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பானா அலாபெத் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இவள் தனது குடும்பத்துடன் அலெப்போவில் இருந்து வெளியேறினாள். தற்போது துருக்கியில் அகதியாக தங்கி இருக்கிறாள்.
இவள் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்டு டிரம்புக்கு உருக்கமான கடிதம் எழுதி இருக்கிறாள். அதில்:-
தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியாவில் அமெரிக்க விமானப் படை நடத்தி வரும் தாக்குதலில், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தலைவர் அபு அப்கான் அல்-மஸ்ரி கொல்லப்பட்டார்.
சிரியாவில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கு அதிகமான பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசு தரப்பு ஊடக தகவல் தெரிவிக்கின்றது.
மாகாணத்தின் தலைநகருக்கு வெளியே பாலம் ஒன்றின் மீது முதல் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் சென்றுள்ளனர். அப்போது மேலும் ஒரு வெடிகுண்டை தற்கொலை தீவிரவாதி வெடிக்க செய்துள்ளான் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிரியா நாட்டின் வடகிழக்கு நகரமான குர்திஷ் பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 44 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெறிகிறது.
உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இன்று பல்வேறு தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். 'மேற்காசிய நாடுகளான, சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும், ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தங்களின் அமைப்புகளை உலகம் முழுவதும் நிறுவுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இஸ்லாமிய எதிரி நாடுகள் மீது குறி வைத்து கொடூர தாக்குதல் நடத்துவது அவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.