தமிழகத்தில் ஏஏஒய் அட்டைகள் தவிர மற்ற அட்டைதாரருக்கு மானிய விலையான சர்க்கரை கிலோவுக்கு ரூ.25 என்ற அளவில் வரும் 1-ம் தேதி முதல் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் அரசாணை பிறப்பித்திருந்தார்.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் இன்று தமிழகத்தில் ஏஏஒய் அட்டைகள் தவிர மற்ற அட்டைதாரருக்கு மானிய விலை சர்க்கரை கிலோவுக்கு ரூ.25 என்ற உத்தரவு அமுலுக்கு வந்தது.
நீண்டகாலமாக மானிய விலையில் சர்க்கரை வழங்கி வந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்தது. அந்த முடிவை அ.இ.அ.தி.மு.க. அரசு எதிர்க்காத காரணத்தால் பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிற சர்க்கரை விலை கிலோ ரூபாய் 25 ஆக தமிழக அரசு
உயர்த்தியிருக்கிறது. இந்த முடிவு தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
தமிழக அரசின் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 காசுகள் என்பதை 25 ரூபாயாக உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குறியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழக அரசின் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 காசுகள் என்பதை 25 ரூபாயாக உயர்த்தி இருப்பது ஏற்க முடியாதது, கண்டிக்கத்தக்கது ஆகும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பழைய விலையில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் கண்துடைப்பு ஆகும்.
தமிழகத்தில் ஏஏஒய் அட்டைகள் தவிர மற்ற அட்டைதாரருக்கு மானிய விலையான சர்க்கரை கிலோவுக்கு ரூ.25 என்ற அளவில் வரும் 1-ம் தேதி முதல் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் பிறப்பித்த அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.