தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் , சபாநாயகர் அப்பாவு சாவர்க்கர், கோட்சேவை பின்பற்றுபவர் என விமர்சித்ததால் ஆளுநர் ஆர்என் ரவி வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சுக்கு உளவுத்துறையை குற்றம் சாட்டியிருப்பதால், தமிழக காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை என கூறியிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, சிபிஐ விசாரணையை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குஷ்பூவை அவதூறாக பேசியதற்காக திமுகவை கடுமையாக வசைபாடியவர்கள் இப்போது எம்எல்எஏவாக இருக்கும் வானதி சீனிவாசன் திமுகவினரைப் ற்றி பேசிய அறுவருக்கத்தக்க கொச்சைப் பேச்சை கண்டிக்காதது ஏன்? என திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டியை நேரில் கண்டுகளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கமலாலயத்தில் திமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, என்னை மாத்துனும்னா மோடிக்கிட்ட டெல்லி போய் நேரா கம்ப்ளைண்ட் கொடுங்க என ஆவேசமாக கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.