தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்க இருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசின் உரையை வாசிக்க மறுத்தார். அதில் சில தகவல்களில் மாறுபாடு இருப்பதாக தெரிவித்து அமர்ந்தார். அதன்பிறகு சட்டப்பேரவை தலைவர் சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையை வாசித்து முடித்தார். அதன்பிறகு, ஆளுநருக்கு தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் மரபை மீறக்கூடாது என அறிவுறுத்தியதுடன் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு புயல் வெள்ள பாதிப்பின்போது ஒருபைசா நிதி கொடுக்கவில்லை என்றும், அதனை பெற்றுக் கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
நாட்டு மக்களிடம் கணக்கு கொடுக்காத பிஎம் கேர் நிதியில் இருந்து சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அப்பாவு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டார். அத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சாவர்க்கர், கோட்சேவை பின்பற்றுவதாகவும் அவர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றம் மற்றும் மக்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்று கூறினார். இதனையடுத்து தேசிய கீதம் இசைக்கும் முன்பே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். அது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது. அந்த விளக்கத்தில், “ கவர்னரின் வரைவு உரை 9.2.2024 அன்று ராஜ்பவனில் அரசிடமிருந்து பெறப்பட்டது. அந்த உரையில் உண்மைக்கு புறம்பான தவறான பல பத்திகள் இருந்தன.
அதற்கு சில ஆலோசனைகளை கொடுத்து கவர்னர் அந்த கோப்பை திருப்பி அனுப்பினார். அதாவது தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட வேண்டும், அரசியல் கருத்துகள் இடம்பெறக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு திருவள்ளுவரின் குறளை படித்தார். அந்த உரையில் தவறான கூற்றுக்கள் மற்றும் உண்மைக்கு புறம்பான ஏராளமான பத்திகளைக் கொண்டிருப்பதால், அந்த பதிவை படிக்க இயலாது என தெரிவித்துவிட்டார்.
அதன்பின் சபாநாயகர் அவர்கள் உரையின் தமிழாக்கத்தைப் படித்தார். கவர்னர் அந்த உரை முடியும் வரை அமர்ந்திருந்தார். சபாநாயகர் உரையை முடித்ததும், திட்டமிட்டபடி கவர்னர் தேசிய கீதத்திற்காக எழுந்தார். இருப்பினும், சபாநாயகர், கால அட்டவணையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, கவர்னருக்கு எதிராக அவதூறு கருத்துகளை பேச தொடங்கினார். கவர்னரை, நாதுராம் கோட்சே மற்றும் பலவற்றைப் பின்பற்றுபவர் என்று கூறினார். சபாநாயகர் இந்த நடத்தையால் தனது நாற்காலியின் கண்ணியத்தையும், சபையின் மாண்பையும் குறைத்தார். இதனால், கவர்னர் அவர்கள் தமது பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு சபையை விட்டு வெளியேறினார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ