எல்லை சாலைகள் கட்டுமான அமைப்பு, இந்தியாவில், லடாக்கில் 19,300 அடி உயரத்தில் சாலை அமைத்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம், உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கபட்டுள்ள சாலை என்ற சாதனையை ப்டைத்துள்ளது இந்தியா. இதன் மூலம் லடாக்கில் சுற்றுலா மேம்படுத்தப்படுவதோடு, இப்போது வாகனங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்தப் பகுதிகளுக்கு நேரடியாகச் செல்ல முடியும். இந்த சாலை கிழக்கு லடாக்கின் மற்ற பகுதிகளை உம்லிங்லா (Umlingla Pass) பாஸ் வழியாக இணைக்கிறது.
ரிஷிகேஷ்-தரசு சாலை நெடுஞ்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை எண். 94), போக்குவரத்து அதிகம் இருக்கும் சம்பா நகரத்தில், 440 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை அமைத்ததற்காக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் எல்லை சாலைகள் அமைப்பான பி.ஆர்.ஓவை பாராட்டினார். பணியில் ஈடுபட்ட அணிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைதெரிவித்துக் கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.