Bank Locker New Rules : லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் புகார்களுக்குப் பிறகு வங்கி லாக்கரின் விதிகளில் பெரிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்துள்ளது.
நம்மில் பெரும்பாலானோருக்கு, மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை, பாதுகாப்பாக வைக்கும் நோக்கில், வங்கிகளின் லாக்கரில் வைத்திருக்கும் வழக்கம் உள்ளது.
வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக (Bank Locker) வசதியை பயன்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2022 ஜனவர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
லாக்கர்கள் தொடர்பான விதிகளை ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் லாக்கர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
நம்மில் பலர் வங்கி லாக்கரில், நகைகள் மட்டுமல்லாது பணத்தையும் வைக்கும் பழக்கம் உள்ளது. பணத்தை வங்கியில் வைத்தால் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்புவதும் இதற்கு ஒரு காரணம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.