பாகிஸ்தானில் நடக்கும் சார்க் நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
விமான நிலையத்தில் அதிகாரிகள் ராஜ்நாத் சிங்கை வரவேற்றனர். பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் செல்லும் முதல் இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்நாத்சிங் பாகிஸ்தான் வருகை தந்தால் நாடு தழுவிய அளவில் போரட்டம் நடத்தப்படும் என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளதால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சார்க் நாடுகளின் உள்துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற ராஜ்நாத் சிங்கை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். அதேவேளையில், ராஜ்நாத் வருகைக்கு எதிர்ப்பு பாகிஸ்தானில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.